Press "Enter" to skip to content

அயோத்தி தீர்ப்பை மதிக்கிறோம்; திருப்தி அடையவில்லை: சுன்னி வக்ஃபு வாரியம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒதுக்குவதாக உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு ஒரு மனதாகத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இத் தீர்ப்பு குறித்து வழக்கில் முஸ்லிம் சார்பான மனுதாரரான சுன்னி வக்ஃபு வாரியத்தின் வழக்குரைஞர் ஜாஃபர்யாப் ஜிலானி எதிர்வினையாற்றியுள்ளார்.

தீர்ப்பு வெளியானவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீர்ப்பை மதிக்கிறோம் ஆனால் திருப்தி அடையவில்லை. மசூதிக்காக வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவது எங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டுமா என்பது குறித்து உரிய காலத்தில் முடிவெடுப்போம்” என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.