சீனா – அமெரிக்கா வர்த்த போரால் ஏற்பட்ட பாதிப்புகள் எனென்ன?

சீனா – அமெரிக்கா வர்த்த போரால் ஏற்பட்ட பாதிப்புகள் எனென்ன?

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இதற்கு முன்பு காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன; மோதல்களும் நிகழ்ந்துள்ளன; பல சர்ச்சரவுகளும் இருந்தன. இருப்பினும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஜனவரி 15ஆம் தேதியன்று வர்த்தகம் ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது.

இதன்மூலம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் சற்று மாற்றம் ஏற்படும் என்று கூறலாம். அது உலக பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும்.

இரண்டு வருடங்களாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளின்போது என்னவெல்லாம் மாறியது?

’வர்த்தக பற்றாற்குறை’ குறைகிறது

வரி விதித்து வர்த்தக போரை தொடுத்தால், சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகம் பற்றாற்குறை முடியும் என டிரம்ப் நம்புகிறார். அதாவது அமெரிக்கா சீனாவுக்கு செய்யும் ஏற்றுமதியைவிட, சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி அதிகமாக இருக்கும் நிலை மாறுமென அவர் நம்புகிறார்.

சீனாவில் அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை குறைந்தாலும், குறிப்பிடத்தக்க வகையில் அது குறையவில்லை என்று கூறலாம்.

விவசாய ஏற்றுமதிகளில் குறைவு

சீன பொருட்கள் மீது டிரம்ப் வரி விதித்ததால் சீனா கொடுத்த பதிலடியால் அமெரிக்க விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

அமெரிக்கா சீனாவுக்கு செய்யும் ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 25பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்தது. இதுதான் சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச சரிவு.

சீனா வரி விதித்ததால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்றே சொல்ல்லாம். ஏனென்றால் அமெரிக்க மக்கள் தொகையில் விவசாயிகள் 1 சதவீதம்தான். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய அதிகளவில் மானியங்களும் கொடுக்க வேண்டியிருந்தது.

சீன முதலீடுகளும் குறைந்தன

இந்த வர்த்தக போரின்போது சீனாவில் அமெரிக்காவின் முதலீட்டு அளவு நிலையாக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் சீனாவின் முதலீடு கணிசமாக குறைந்தது.

அமெரிக்காவில் உள்ள அறிவுசார் அமைப்பான அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட் அளித்துள்ள தரவுகளின்படி, 2016ஆம் ஆண்டு சீனாவின் முதலீடு 54பில்லியன் டாலரிலிருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு அது 9.7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்தது. 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில், வெறும் 2.5பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே அமெரிக்காவில் சீன நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

குறையும் சீன முதலீடு

சீனாவில் அமெரிக்காவின் முதலீடு தொடர்ந்தாலும், சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், இருநாடுகளுக்குமான பதற்றம் குறித்து தங்களுக்கு மிகப்பெரிய கவலையுள்ளதாக தெரிவித்துள்ளன.

அமெரிக்க சீன வர்த்தக கவுன்சில், 2019ஆம் ஆண்டில் சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் இந்த வர்த்தக போர் தங்களின் வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர் என்கிறது.

2017ஆம் ஆண்டு வெறும் 45% அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே இந்த ஆபத்து குறித்து கவலை கொள்ள நேர்ந்தது. இது சீனா, அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி.

சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தக போரால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் 3% வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து முழுவதுமாக ஒரு வருடத்தில் தெரியவரும் என்கின்றனர்.

மறுபக்கத்தில் சீனாவின் வளர்ச்சியும் குறைந்து வருகிறது. 2020-ல் அதன் பொருளாதார வளர்ச்சி 6% வரை குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.

இருபெரும் நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்த போர் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சீனாவை தவிர தங்களின் பிற கூட்டாளி நாடுகளிடமும் வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றியமைக்க அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 2019ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 3% என தெரிவித்துள்ளது.

என்னதான் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டாலும், சீனா மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி மாறிவிடாது.

அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத பட்டியலில் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவே மற்றும் பிற நிறுவனங்கள் சிலவற்றை சேர்த்தது அமெரிக்கா.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவில் சில நிறுவனங்களை பட்டியலில் சேர்த்தது.

தற்போது ஏற்படும் ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கலாம். ஆனால் இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் மோதல் முடிவதாக தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan