ரஜினிகாந்த் பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி: பியர் கிரில்சுடன் இணையும் இரண்டாவது இந்தியர்

ரஜினிகாந்த் பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி: பியர் கிரில்சுடன் இணையும் இரண்டாவது இந்தியர்

டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் இந்த நிகழ்ச்சிக்காக நடந்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸுடன் சாகசக் காட்சிகளில் தோன்றினார்.

பாஜக தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரதமர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் பெரிய திரைகளில் ஒளிபரப்பினர்.

இந்த சூழலில், இந்தாண்டு இந்த நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை தொடர்ந்து மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இரண்டாவது இந்தியர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் மேன் Vs வைல்ட் (Man vs Wild) ஷோ எங்கு படம்பிடிக்கப்பட உள்ளது?

பியஸ் கிரில்ஸுடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபூர் காட்டில் படம் பிடிக்கப்பட உள்ளது.

ரஜினிகாந்தின் மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சியை எப்போது டிவியில் பார்க்கலாம்?

இந்திய பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 12ஆம் தேதி டிஸ்கவரி தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பப்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது, குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து ரஜினியின் மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்திபூர் காட்டில் என்ன சிறப்பு?

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபூர் தேசிய பூங்கா அங்கிருக்கும் புலிகள் சரணாலயத்துக்கு பெயர் போனது. இந்தியாவிலேயே இரண்டாவது அதிக புலிகள் எண்ணிக்கை கொண்ட பூங்காவாக பந்திபூர் விளங்குகிறது.

மேன் Vs வைல்ட் (Man vs Wild) நிகழ்வை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

இந்த செய்தி வெளியான உடன் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #manvswild என்ற ஹாஷ்டேக் சென்னை அளவில் டிரெண்டாகி வருகிறது. ரஜினிகாந்த் பந்திபூர் வனப்பகுதியில் டீ-சர்ட்டில் நடந்துவரும் காணொளியும் வைரலாகி வருகிறது.

தகவல் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan