15 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர் காவல் துறை மீது துப்பாக்கிச் சூடு

15 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர் காவல் துறை மீது துப்பாக்கிச் சூடு

உத்தரப்பிரதேசம் ஃபரூக்காபாத்தில் சுமார் 15 குழந்தைகள் மற்றும் சில பெண்களை ஒரு வீட்டில் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ள நபர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி குண்டும் வீசியுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

இந்த சம்பவத்தில் 3 போலீசார், கிராமவாசிகள் காயமடைந்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் தமது வீட்டுக்கு, தமது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை அழைத்துள்ளார் என்றும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

பிணைக்கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan