IND vs NZ டி20: இந்த முறையும் சூப்பர் சுற்றில் வென்றது இந்தியா; 4-0 என முன்னிலை

IND vs NZ டி20: இந்த முறையும் சூப்பர் சுற்றில் வென்றது இந்தியா; 4-0 என முன்னிலை

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் மூன்று டி20 போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், வெலிங்டனில் இன்று நான்காவது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களே எடுத்தது.

39 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் மற்றும் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்த மணீஷ் பாண்டே தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஈஷ் சோதி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தவர். இவரது சிறு வயதிலேயே இவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது.

போட்டி நடைபெறும் ‘ஸ்கை ஸ்டேடியம்’ மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160. இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 133 மட்டுமே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan