மத்திய வரவு செலவுத் திட்டம் 2020 Live updates : மத்திய வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் – நேரலை தகவல்கள்

மத்திய வரவு செலவுத் திட்டம் 2020 Live updates : மத்திய வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் – நேரலை தகவல்கள்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நிலையில், நேற்று 2019-2020ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை அரசு வெளியிட்டிருந்தது.

2020-21ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6 லிருந்து 6.5 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு 2019-20 நிதியாண்டில் தொழில் துறையின் வளர்ச்சி 2.5% ஆக இருந்துள்ளது.

Budget 2020 Live:

நிதி அமைச்சகத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-2020: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பொருளாதாரத்தை பொறுத்த வரை 2019ஆம் ஆண்டு உலகிற்கே கடினமான ஆண்டு என்பதால் அது இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது.

தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதமான 5%, கடந்த 11 ஆண்டுகளிலேயே மிகவும் குறைவான அளவு. தனிநபர் வாங்கும் திறன் கடந்த ஏழு ஆண்டுகளில் குறைவான நிலையில் உள்ளது.

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடுகள் குறைந்துள்ளன. உற்பத்தி துறையின் வளர்ச்சி 15 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்துள்ளது.

இந்தியா காலணியாதிக்கத்தில் இருந்தபோது முதன் முதலில் 1860ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஜேம்ஸ் வில்சன். இவர் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட்வங்கியை நிறுவியவர் ஆவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan