டெல்லி ஷாஹின்பாக் போராட்டம் நடக்கும் பகுதியில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

டெல்லி ஷாஹின்பாக் போராட்டம் நடக்கும் பகுதியில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

டெல்லி ஷாஹினபாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனடியாக போலீசார் அவரை மடக்கிப் பிடித்ததாகவும் துணை காவல் ஆணையர் சின்மயி பிஸ்வால் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ.செய்தி முகமை.

இரண்டு நாள்களுக்கு முன்புதான், டெல்லி ஜாமியா மில்லியா பகுதியில் காந்தி சமாதியை நோக்கி ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டதற்காககூ கைது செய்யப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan