விபத்திற்குள்ளான ரஷிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

விபத்திற்குள்ளான ரஷிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

ரஷியாவில் ஞாயிறன்று 92 பயணிகளுடன் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளா ராணுவ விமானத்தின் கருப்புப் பெட்டி ஒன்றை ரஷிய விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடற்கரையிலிருந்து 16,000 தொலைவில் அது கண்டுபிடிக்கப்பட்டது; தற்போது ஆராய்ச்சிக்காக மாஸ்கோவிற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

டுபோலஃப்- 154 என்ற அந்த விமானம் சோச்சியிலிருந்து கிளம்பிய சற்று நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்கலாம் அல்லது விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போது வெடித்திருக்கலாம் என விபத்து குறித்து பல ஊகங்கள் நிலவுகின்றன.

விபத்திற்கான காரணம் தெரியும் வரை அனைத்து டுபோலஃப் – 154 விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கருப்பு பெட்டிகளில் ரேடியோ கடத்திகள் இல்லாமை, தேடுதல் பணியில் தோய்வை ஏற்படுத்தியுள்ளது.

Source: BBC.com

Author Image
murugan