விபத்துக்குள்ளான ரஷிய விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியும் கண்டுபிடிப்பு

விபத்துக்குள்ளான ரஷிய விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியும் கண்டுபிடிப்பு

ரஷியாவில் ஞாயிறன்று 92 பயணிகளுடன் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

முதல் கருப்புப் பெட்டி செவ்வாய்கிழமையன்று கண்டுப்பிடிக்கப்பட்டது; தற்போது அதை மாஸ்கோவில் ஆராய்ந்து வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் இருந்து உடல்கள் மற்றும் உடலின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண்பதற்காக மாஸ்கோவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டுபோலஃப் – 154 என்ற விமானம் வானிலை சரியாக இருந்த போதிலும் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது; விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Source: BBC.com

Author Image
murugan