பிரிட்டன்: கட்டாயமாகும் வாக்காளர் அடையாள அட்டை

பிரிட்டன்: கட்டாயமாகும் வாக்காளர் அடையாள அட்டை

இங்கிலாந்தின் சில இடங்களில் வாக்களிப்பதற்கு முன் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டைகளை காட்டவேண்டிய நடைமுறை அமுலுக்கு வருகிறது.

தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக இந்த சோதனை முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச சமூகங்கள் அதிகம் வசிக்கும் இடங்களில்,இன மற்றும் மத உணர்வுகளை மதிப்பதாக நினைத்துக்கொண்டு அதிகாரிகள் சிலர் தேர்தல் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் செல்வதாக அரசின் அறிக்கை தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Source: BBC.com

Author Image
murugan