கொலம்பியா : சிறிய குற்றச்செயல் புரிந்துவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

கொலம்பியா : சிறிய குற்றச்செயல் புரிந்துவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

கொலம்பியாவில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த உள்நாட்டு மோதலில் சிறிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஒரு சட்டத்திற்கு கொலம்பிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வலது சாரி ஃபார்க் கொரில்லா குழுக்களுடனான சமாதான ஒருங்கிணைப்பை நோக்கிய முதல்படி என்று அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் இதனை புகழ்ந்து பேசியுள்ளார்.

ஃபார்க் போராளிகளுடன் போடப்பட்ட முதல் ஒப்பந்தததை கொலம்பிய மக்கள் பொது வாக்கெடுப்பில் நிராகரித்ததை தொடர்ந்து, அடுத்து போடப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த பொது மன்னிப்பு ஓர் அங்கமாகும்.

இந்த உள்நாட்டு மோதலில், 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த பொது மன்னிப்பு சட்டமானது, ஃபார்க் குழுவை சேர்ந்த சில இளம் உறுப்பினர்களுக்கும், ராணுவத்தை சேர்ந்த சில படையினர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியும். ஆனால், இரு தரப்பிலும், சிறிய குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கே இந்த சட்டம் பொருந்தும்.

Source: BBC.com

Author Image
murugan