ஏட்டிக்கு போட்டி இல்லை: பூட்டின் அறிவிப்பு

ஏட்டிக்கு போட்டி இல்லை: பூட்டின் அறிவிப்பு

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

தமது நாட்டு தேர்தல்களில் ரஷ்யத் தலையீடு இருந்தது என அமெரிக்கா கூறுகிறது.

ஹிலரி கிளிண்டன் உட்பட பலரது மின்னஞ்சல்கள் இணையதள அத்துமீறல் மூலம் இலக்கு வைக்கப்பட்டன என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.

ஆனால் ரஷ்யா இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இச்சூழலில் பதிவி விலகிச் செல்லவுள்ள அதிபர் ஒபாமா, அமெரிக்காவிலிருந்து ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவுசார் சமூகத்துடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக் கூறுகிறார்.

ரஷ்ய அதிபர் பூட்டினோ அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

Source: BBC.com

Author Image
murugan