இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் விமர்சனங்களில் இருந்து விலகி நிற்கும் பிரிட்டன்

இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் விமர்சனங்களில் இருந்து விலகி நிற்கும் பிரிட்டன்

இந்த வாரத்தின் தொடக்கத்தில், இஸ்ரேல் குறித்து அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்ட தீவிர விமர்சனங்களில் இருந்து பிரிட்டன் அரசாங்கம் விலகி நிற்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் வரலாற்றில் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அரசு மிகவும் வலதுசாரி அரசு என்றும் இந்த அரசு அமைதி நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும்புதன்கிழமையன்று தனது உரையில் கெர்ரி குற்றம் சுமத்தினார்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவின் செய்தி தொடர்பாளர், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இஸ்ரேல் குடியிருப்புக்கள் குறித்து பிரிட்டன் விமர்சித்திருந்தாலும், ஒரு நட்பு நாட்டில், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தாக்கிப் பேசுவது பொருத்தமானது அல்ல என்று தெரிவித்தார்.

Source: BBC.com

Author Image
murugan