காங்கோவில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை

காங்கோவில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை

காங்கோ ஜனநாயக குடியரசு அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியினர் நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தை என்று விவரிக்கப்படும் பேச்சுவார்த்தைக்காக இன்று சந்திக்கவுள்ளனர்.

அதிபர் ஜோசப் கபிலாவின் ஆட்சிக்காலத்தின் இறுதி ஆண்டு இந்த மாதத் துவக்கத்தில் முடிந்த நிலையில், தேர்தல் நடத்துவது தாமதிக்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் அதிபர் கபிலா அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரி நடந்த போராட்டத்தில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று நடக்கவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் ஆயர்கள் மத்தியஸ்தம் செய்யுள்ளனர். எதிர்க் கட்சியை சேர்ந்த ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டை அடைவதை விட தோல்வியடையும் நிலை உள்ளதாகத் தெரிவித்தார்.

Source: BBC.com

Author Image
murugan