Press "Enter" to skip to content

`புது கட்டுப்பாடுகள்; பள்ளிகள் மூடல்’ – நச்சுப் புகையால் அவதிப்படும் பாங்காக்!

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (01/02/2019)

கடைசி தொடர்பு:08:15 (01/02/2019)

தாய்லாந்து தலைநகரம் பாங்காக் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் காற்றில் நச்சுப் புகையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காற்று மாசு பாதிப்பை தடுக்கும் முகமூடி அணிய வேண்டும் எனவும், வருகின்ற சீன புத்தாண்டிற்கு ஊதுபத்தி, காகிதங்கள் உட்பட எதையும் எரிக்கக் கூடாது எனவும் மக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க திடீரென அனைத்துப் பள்ளிகளும் சில நாட்கள் வரை மூடப்பட்டுள்ளது. 

photo credit: @RichardBarrow

இதுகுறித்து பாங்காக் ஆளுநர் Aswin Kwanmuang கூறும்பொழுது, “பாங்காக் உட்பட 3, 4 நகரங்கள் இதனால் பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதன் மூலம் பாதிப்புகளையும் போக்குவரத்து சிக்கல்களையும் குறைக்கலாம். மேலும், பூங்காக்களில் உடற்பயிற்சி செய்பவர்களையும் எச்சரித்துள்ளோம்” என்றார். அதிகமான போக்குவரத்து செயல்பாடுகள், கட்டுமான பணிகள், பொருட்களை எரித்தல் மற்றும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை போன்றவை காற்று மாசுவிற்கு காரணமாகக் கூறப்படுகிறது. 

புகை

photo credit: @RichardBarrow

காற்றின் மதிப்பீடு அளவீட்டின்படி காற்றின் மாசுபாடு இந்த மாத மத்தியில் இருந்த 156 என்ற அளவிலிருந்து 171ஆக உயர்ந்துள்ளது.இது சீனாவின் பெருநகரங்களின் காற்று மாசைவிட அதிகம். இந்நிலை தொடர்ந்தால், விரைவில் பேங்காக் மோசமான நிலையை அடையும் என்கிறார்கள் பசுமை ஆர்வலர்கள். ஆஸ்திரேலியாவில் நீர் வற்றுமளவிற்கு கடும் வெப்பம். அதற்கு நேர்மாறாக அமெரிக்காவில் நீர் உறையுமளவிற்குக் குளிர், பாங்காக் மற்றும் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு .உலக வெப்பமயமாதலின் விளைவை அருகில் பார்க்க கூடியதாக உள்ளன சமீபத்திய நிகழ்வுகள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அப்துல்லா மு

Source: Vikatan.com

More from உலகம்More posts in உலகம் »