Press "Enter" to skip to content

“டிரம்ப் ஆதரவு தொப்பி அணிந்தவருக்கு உணவில்லை” என்று அறிவித்த முதலாளி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” என்ற வாசகத்துடன், பேஸ்பால் விளையாட்டு தொப்பி அணிந்துள்ள யாருக்கும் உணவு பரிமாற வேண்டாம் என்று அறிவித்த கலிபோர்னிய ஹோட்டல் முதலாளி ஒருவர், தனது முடிவை மாற்றியுள்ளார்.

சுவஸ்த்திகா அல்லது இனவெறி கொள்கையுடைய ‘கு குலக்ஸ் கிளான்’ குழுவை போல, கோபம், வெறுப்பு மற்றும் வன்முறையின் அடையாளங்களாகவும் இந்த தொப்பிகள் மாறியுள்ளதாக ஹோட்டல் முதலாளி கென்ஜி லோபஸ்-அல்ட் முன்னதாக தெரிவித்தார்.

சமீபத்திய வன்முறையான, இனவெறி தாக்குதல்களை நடத்தியோர் இத்தகைய தொப்பியை அணிந்து கொண்டு, இந்த வசனத்தை முழங்கினர் என்று இந்த தொப்பிக்கு எதிரானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தனது முடிவு சிலரை கோபப்படுத்தியுள்ளதாகவும், பிறரை புண்படுத்தியுள்ளதாகவும் இப்போது லோபஸ்-அல்ட் குறிப்பிடுகிறார்.

எனவே, தங்களின் வெறுப்புகளை வாசலுக்கு வெளியே விட்டுவிட்டு வருகின்ற அனைவரையும் சன் பிரான்சிஸ்கோவுக்கு அருகிலுள்ள தனது ஹோட்டல் வரவேற்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையால் மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி)க்கு அழுத்தம்”

2019-20 ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல்.

அவர் தமது வரவு செலவுத் திட்டம் உரையில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பணம் தரும் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பெரிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: “வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையால் மைய கட்டுப்பாட்டு வங்கி (ரிசர்வ் வங்கி)க்கு அழுத்தம்”

‘இது தேர்தலுக்கான வான வேடிக்கை’ – இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்து ப. சிதம்பரம்

இன்று (வெள்ளிக்கிழமை) 2019-20 ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம்டை மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டம் இடைக்கால வரவு செலவுத் திட்டம் என்று கூறமுடியாது. இது ஒரு முழு ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை போல தயாரித்து அறிவித்துள்ளார்கள்” என்றார்.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: ‘இது தேர்தலுக்கான வான வேடிக்கை’ – ப. சிதம்பரம்

வரவு செலவுத் திட்டம் 2019: ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை என்று வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளார் பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல்.

2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் போது வரிவிலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட நடுத்தர வர்க்க எதிர்பார்ப்புகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத் தளத்தில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: வரவு செலவுத் திட்டம் 2019: ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை

அமெரிக்காவை இறுக்கும் கொடும் பனி: 21பேர் பலி

துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலை நிலவும் நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர்.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: அமெரிக்காவை இறுக்கும் கொடும் பனி: 21 பேர் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.