Press "Enter" to skip to content

நியூசிலாந்தின் மிக பெரிய டாஸ்மன் கிளேசியர் பனி மலை உடைந்தது எதனால்?

நியூசிலாந்தின் மிக பெரிய பனி மலையான டாஸ்மன் கிளேசியரில் பெரிய பனி பாளங்கள் உடைந்துள்ளன.

இந்த பனி மலையின் பனி உருகி, அதன்கீழ் உள்ள ஏரியின் கால் பகுதியை நிரப்பியுள்ளது.

பனி விரைவாக உருகி தேங்குகின்ற நீரால், 1970ஆம் ஆண்டுகளில் இந்த ஏரி உருவானது. புவி வெப்பமயமாதலால் இது நடைபெறுவதாக கருதப்பட்டது.

இந்த பனிப்பாளங்கள் வானை தொடும் அளவுக்கு பெரிதானவையாக உள்ளதாக வழிகாட்டி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

வானை தொடும் அளவு உயரமான பனிப்பாளங்கள் இந்த ஏரியில் மிதக்கின்றன என்று இந்த கயாகிங் கிளேசியரின் உரிமையாளர் சார்லி ஹோப்ஸ் நியூசிலாந்து வானெலியிடம் கூறியுள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மனில் நிகழ்கின்ற மிக முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

தாய்லாந்து இளவரசியின் அரசியல் ஆசை – அரச குடும்பத்தில் மோதல்

இதற்கு முன்னர் நடந்திராத நடவடிக்கையான, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் முடிவை தாய்லாந்து அரசரின் மூத்த சகோதரி உபான்ராட் மகிதூன் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

இதனிடையே தனது சகோதரி அரசியலில் ஈடுபடும் முடிவு தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கோன் ‘முறையற்றது’ என்று கூறியுள்ளார்.

67 வயதாகும் உபான்ராட் மகிதூன் அரசியலில் ஈடுபட்டால், பாரம்பரியமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் மன்னர் குடும்பத்தின் வழக்கத்துக்கு மாறாக இது அமையும்.

விரிவான செய்தியை வாசிக்க: தாய்லாந்து இளவரசியின் அரசியல் ஆசை – அரச குடும்பத்தில் மோதல்

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம்: ‘ஜெயலலிதா எழுப்பியது உரிமைக் குரல்; பன்னீர் செல்வத்தினுடையது வெறும் புலம்பல்’

இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் நலத் திட்டங்களுக்காக 82,673 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வரும், மாநில நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்டம்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.

விரிவான செய்தியை வாசிக்க: ‘ஜெயலலிதா எழுப்பியது உரிமைக் குரல்; பன்னீர் செல்வத்தினுடையது வெறும் புலம்பல்’

#Proposeday: உங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள்

இது பிப்ரவரி மாதம். வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது.

யாரிடமாவது காதலைச் சொல்லி மறுப்பை எதிர்கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் பட்டியல் உங்களுக்கானதுதான்.

நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் குறைந்தது ஒரு முறையாவது, உடலும் மனமும் ஒரு சேர நடுங்க காதலை யாரிடமாவது சொல்லியிருப்போம்.

விரிவான செய்தியை வாசிக்க: உங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள்

இலங்கை கிழக்கு மாகாணம்: தன் மாளிகை பராமரிப்பு நிதியை குழந்தைகளின் கல்விக்கு வழங்கிய ஆளுநர்

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகையினை பராமரிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதியை, தந்தையரை இழந்த ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு, அந்த மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபாய் நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இந்த நிலையில், குறித்த நிதியை கிழக்கு மாகாணத்தில் தந்தையரை இழந்த மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

விரிவான செய்தியை வாசிக்க: தன் மாளிகை பராமரிப்பு நிதியை குழந்தைகளின் கல்விக்கு வழங்கிய ஆளுநர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »