Press "Enter" to skip to content

ஹங்கேரியில் 4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம் மற்றும் பிற செய்திகள்

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். குடியேற்றத்தை மட்டும் சார்ந்திராமல் ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க இது ஒரு வழி என்று பிரதமர் விக்டர் ஆர்பன் கூறினார்.

அந்நாட்டில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்க்கின்றனர்.

ஹங்கேரியின் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு வீழ்ச்சி ஏற்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சாராசரியைவிட ஹங்கேரியில் குறைவாகும்.

நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தபிறகு இது ரத்து செய்யப்படும். ஐரோப்பாவில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதங்களுக்கு காரணம் குடியேற்றம்தான் என்று பிரதமர் ஆர்பன் கூறினார்.

“ஹங்கேரிய மக்கள் வித்தியாசமாக நினைக்கிறார்கள்,” என்று தெரிவித்த அவர், “எங்களுக்கு மக்கள்தொகை என்பது எண்களாக தேவையில்லை. எங்களுக்கு ஹங்கேரிய குழந்தைகள்தான் தேவை” என்றார்.

ரஃபேல்: ‘மத்திய அரசு குறைவான வெளிப்படைத்தன்மையுடனேயே இருந்துள்ளது’

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குழுவின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் வகையில் பிரதமர் அலுவலகமும் வேறொரு பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2015ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு, அப்போதைய பாதுகாப்பு துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்திய பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தையை பிரதமர் அலுவலகமும் நடத்தியதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி ஹிந்து பத்திரிகையில், இது தொடாபான கட்டுரை வெளிவந்த அன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக ஈடுபட்டுள்ளதை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கடிதமே உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

“பிரதமர் நரேந்திர மோதி 30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி அவருடைய நண்பரான அனில் அம்பானியிடம் வழங்கியுள்ளார்,” என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். ரஃபேல் விவகாரத்தில் இந்த குற்றச்சாட்டு வைக்கப்படுவது பற்றி ஓய்வு பெற்ற துணை ஏர் மார்ஷல் கபில் காக் பிபிசியிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க:ரஃபேல்: ‘மத்திய அரசு குறைவான வெளிப்படைத் தன்மையுடனேயே இருந்துள்ளது’

மலையக மக்களின் சம்பளத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் செல்லும் தனிநபர்

இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க பல்வேறு தரப்பினர், பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

எனினும், இந்த அடிப்படை சம்பள பிரச்சனைக்கான தீர்வு இன்று வரை தீர்க்கப்படாத நிலையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்பு கோரப்பட்ட போதிலும், 700 ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான உடன்படிக்கையில், தொழிற்சங்கங்கள் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தன.

எனினும், இந்த உடன்படிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படாது, இடை நிறுத்தப்பட்டு, அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நரேந்திர மோதி கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை

அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோதி திருப்பூர் வந்திருந்தார்.

அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, திருப்பூரில் அமையவுள்ள 470 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டடம், சென்னை டி.எம்.எஸ் – வண்ணாரப்பேட்டை இடையேயான பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) சேவை ஆகியவற்றை காணொளி மூலம் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

அரசு விழா என்ற போதிலும், மோதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மரபின்படி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க:தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லாமல் பிரதமர் மோதியின் அரசு விழா

பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: டி20 தொடரை இழந்தது இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளிடையே ஞாயிற்றுக்கிழமை ஹாமில்டனில் நடைபெற்ற, தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் இந்தத் தொடரையும் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் நான்கு மட்டையிலக்குடுகளை இழந்து 212 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி 20 ஓவர்களில் மட்டையிலக்குடுகளை இழந்து 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து. இதனால் நியூசிலாந்து நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.