Go to ...
RSS Feed

“பாகிஸ்தான் கடலில் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பலின் முயற்சி முறியடிப்பு”


பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் அரசு வானொலியான ரேடியோ பாகிஸ்தான் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

அமைதியின் மீதான பாகிஸ்தானின் நாட்டம் காரணமாக அந்த இந்திய நீர்மூழ்கியைத் தாங்கள் தாக்கவில்லை என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் நாட்டின் கடல் எல்லையை பாதுகாப்பதில் பாகிஸ்தான் கடற்படைக்கு உள்ள வலிமையைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார் என்கிறது ரேடியோ பாகிஸ்தான்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மாற்றி மாற்றி எல்லையைத் தாண்டி விமானத் தாக்குதல் நடத்திய ஒரு வார காலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக இந்த செய்தி மூலம் அறிய முடிகிறது.

இந்தியா – பாகிஸ்தான் ஊடகங்கள் பதற்றத்தை மென்மேலும் தூண்டுகின்றனவா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com