Press "Enter" to skip to content

கூடுதலாக மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்தாரா மாரடோனா? – முடிவுக்கு வரும் சர்ச்சை மற்றும் பிற செய்திகள்

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான டியேகோ மாரடோனா மூன்று கியூபா குழந்தைகளின் தந்தை என்பதை ஒப்புக்கொள்ள இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற 58 வயதான மாரடோனா, தனது மனைவியை தவிர வேறு குழந்தைகள் தனக்கு கிடையாது என்று முன்னர் மறுத்திருந்தார். இந்த மூன்று குழந்தைகளோடு மொத்தம் எட்டு குழந்தைகளுக்கு அவர் தந்தையாகவுள்ளார்.

இந்த குழந்தைகளுக்கு தானே தந்தை என்பதை உறுதி செய்கின்ற சோதனைகளுக்காக ஹவானா செல்லவிருக்கும் மாரடோனா, இந்த ஆண்டின் முடிவில் இந்த குழந்தைகளுக்கு தானே தந்தை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள இருப்பதாக அவரது வழக்கறிஞர் மேத்திஸ் மோர்லா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இரண்டு தாய்மார்களிடம் இருந்து பிறந்துள்ள இந்த மூன்று குழந்தைகளும் தந்தையாக மாரடோனாவின் பெயரை பயன்படுத்த வழி ஏற்படும்.

தன்னுடைய கோக்கையின் போதைமருந்து பழக்கத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள 2000ம் முதல் 2005ம் ஆண்டு வரை மாரடோனா கியூபாவுக்கு பலமுறை சென்றுள்ளார்.

அவ்வேளையில், அப்போதைய கியூப அதிபர் பிடல் காஸ்டிரோவுடன் நட்பாக பழகி, காஸ்டிரோவின் முகத்தை தனது காலில் பச்சைக்குத்தி கொண்டார்.

திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னர், 2003ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்ட கிளெடியா வில்லாஃபேனுடன் பிறந்த 29 வயதான ஜியானினா மற்றும் 32 வயதான டல்மா என்ற இரு மகள்களை தவிர தனக்கு வேறு குழந்தைகள் இல்லை என்று மாரடோனா முன்னதாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற போராட்டங்களுக்கு பின்னர், 32 வயதான டியேகோ ஜூனியர் மற்றும் 22 வயதான ஜானாவை தனது குழந்தைகள் என்பதை மாரடோனா ஏற்றுக்கொண்டுள்ளார்.

வேரோனிக்கா ஒஜிடாவோடு என்ற பெண்ணின் மூலம், 6 வயதான டியேகோ பெர்னாண்டோ என்ற இன்னொரு குழந்தையும் அவருக்கு உள்ளது.

விராட் கோலி சதமடித்தும் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்க காரணமென்ன?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா வென்ற நிலையில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கியது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலையில் இருந்தது. இப்போட்டியில் தோற்றால் தொடரை இழந்துவிட கூடிய சூழலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தொடரை வெல்வதற்கு இரு அணிகளுக்கும் வாய்ப்பு நீடிக்கிறது.

விரிவாக படிக்க: கோலி மீண்டும் சதம்: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்க காரணமென்ன?

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் கிராமத்துப் பெண்ணின் விண்மீன்ட்-அப் நிறுவனம்

இன்ஜினியரிங் படித்தால் வேலை நிச்சயம்; டிப்ளோமா படித்தால் உடனே வேலை; ஹோட்டல் மேனேஜ்மேண்ட் படிக்கும்போதே சம்பாதிக்கலாம்; எட்டும் உயரத்தில் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு’ என்று காலங்காலமாக படிப்பையும், அதையொட்டிய வேலைவாய்ப்பையும் முன்னிறுத்திய விளம்பரங்களை நாம் கேட்டும், கண்டும் வருகிறோம்.

ஆனால், மூன்று முதல் நான்காண்டுகள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தால், “வேலை இல்லை, வேலை இல்லை, வேலை இல்லை” என்பது மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கிறது.

குடும்ப சூழ்நிலையின் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலைகளை பலர் நாடிச் செல்லும் அவலநிலையும் இருந்து வருகிறது. உதாரணமாக, இன்ஜினியரிங் படித்தவர்கள் ஸ்விகி, சோமாட்டோ போன்ற அலைபேசி செயலியை அடிப்படையாக கொண்ட வீட்டிற்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.

விரிவாக படிக்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் கிராமத்துப் பெண்

பருவநிலை மாற்றம்: பொழியும் மழை, உருகும் பனி

கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால், பனி உருகுவதும் அதிகமாகி உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

ஆர்க்டிக்கின் நீண்ட பனிகாலத்திலும், மழை பொழிவது “ஆச்சரியமாக” இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது நெருக்கமான கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அங்கிருக்கும் அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், கடல்மட்டம் ஏழு மீட்டர் அளவிற்கு உயரும். இதனால், உலகில் உள்ள கடலோர மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

காற்றில் உள்ள ஈரப்பதம்தான் மழைக்கு பதிலாக பனியாக பொழிகிறது. இதனால், வெயில் காலத்தில் பனி உருகுவதை இது சமநிலைப்படுத்தும்.

விரிவாக படிக்க: பொழியும் மழை, உருகும் பனி – உயரும் கடல் மட்டதால் ஆபத்தில் புவி

திமுக-வை கடுமையாக விமர்சித்த பிரேமலதா: “தனித்துப் போட்டியிடத் தயங்கவில்லை”

அதிமுக அணியில் தாங்கள் இடம் பெறுவது உறுதியாகிவிட்டதாக கூறிவந்த தேமுதிக, தாங்கள் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையைப் பற்றி வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கூட்டணி பற்றிய முறையான அறிவிப்பை இன்னும் இரண்டு நாளில் விஜயகாந்த் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.

மேலும், தம்மை சந்தித்துப் பேசுவதற்கு தேமுதிக நிர்வாகிகள் வந்ததை துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு என்று கூறி, துரைமுருகனையும், திமுக-வையும் கடுமையான சொற்களால் சாடினார் பிரேமலதா.

விரிவாக படிக்க: திமுக-வை கடுமையாக விமர்சித்த பிரேமலதா: “தனித்துப் போட்டியிடத் தயங்கவில்லை”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Mission News Theme by Compete Themes.