Press "Enter" to skip to content

இஸ்ரேல் – ஹமாஸ் பரஸ்பர தாக்குதல்: நான்கு பேர் பலி – பதற்றத்தில் காஸா மற்றும் பிற செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் பரஸ்பர தாக்குதல்: என்ன நடக்கிறது காஸாவில்?

காஸா பகுதியில் உள்ள ஆயுத குழு 200க்கும் மேற்பட்ட ஏவுணைகளை கொண்டு தாக்கியதால், நாங்கள் ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் கொண்டு பாலத்தீனத்தை தாக்கினோம் என்கிறார்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். மூன்று இஸ்ரேலிகள் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும், இஸ்ரேலிய ராணுவம் தாக்கியதில் ஒரு தாயும் அவரது குழந்தையும் மரணித்தது உட்பட நான்கு பாலத்தீனியர்கள் இறந்ததாக கூறுகிறார்கள் காஸா அதிகாரிகள்.

ஏப்ரல் மாதம் இஸ்ரேலில் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் அமைதி உடன்படிக்கையை மீறி நடந்துள்ளது.

மணிமுடி சூடினார் தாய்லாந்தின் புதிய அரசர் வஜ்ராலங்கோர்ன்

அரசராக மணிமுடி சூடுவதற்கான சடங்குகள் மூன்று நாட்கள் நடைபெற தொடங்கிய முதல் நாளில், தாய்லாந்து அரசராக மகா வஜ்ரலாங்கோர்ன் மணிமுடி சூட்டப்பட்டுள்ளார்.நீண்டகாலம் ஆட்சி செய்த தந்தை பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், 66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.

விரிவாக படிக்க:மணிமுடி சூடினார் தாய்லாந்தின் புதிய அரசர் வஜ்ராலங்கோர்ன்

மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதல்

‘பாம்யா’ இனிமேல் திரும்ப வரவே மாட்டார். வெள்ளிக்கிழமையன்று அவருடைய அஸ்தியை கங்கையில் கரைத்தார்கள். அப்போது ஆற்றங்கரையில் கூடியிருந்த நண்பர்கள், தங்கள் உற்ற நண்பனுக்கு இறுதி விடை கொடுத்தார்கள்.இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மகாராஷ்டிராவில் நக்சல் பாதிப்புமிக்க கட்சிரோலி மாவட்டத்தின் வட்ஸாவில் கிராமமே கூடியிருந்தாலும், அங்கு மயான அமைதி நிலவுகிறது. இங்குதான் இருக்கிறது பிரமோத் போயாரின் வீடு. 1992 செப்டம்பர் மாதத்தில் குர்கேடாவில் மாவோயிட்டுகள் நடத்திய குண்டுவெடிப்பில் வட்ஸாவின் தேசாய் நகரில் பிரதீப் போயார் உயிரிழந்தார்.

விரிவாக படிக்க:‘பல பிரமோத்கள் வேலைக்கு செல்கிறார்கள், திரும்பி வருவதில்லை’ – மாவோஸ்ட் தாக்குதல் சோகம்

“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை”

தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் தனது ஆதங்கத்தினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார் வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமது தாகீர். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முகமது தாகீர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, மீளவும் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது முதலாவதாக வருகை தந்தவருமாவார்

விரிவாக படிக்க:“விடுதலை புலிகள் காலத்தில் கூட இத்தகைய அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை”

“கதாபாத்திரத்துக்காக திருநங்கைகளுடன் 10 நாட்கள் இருந்தேன்”

தமிழ் படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் பலர் நடித்து பாராட்டு பெற்றுள்ளனர். காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.சராசரியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்வதில் இருந்து, ஏதாவது வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெறும் போக்கு தமிழ் திரைப்படத்தில் அதிகரித்துள்ளது.’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். அவரது தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விரிவாக படிக்க:“கதாபாத்திரத்துக்காக திருநங்கைகளுடன் 10 நாட்கள் இருந்தேன்” – ஸ்ரீபல்லவி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.