Press "Enter" to skip to content

யானைக்கால் ’ஸ்டூல்’: ஆப்பிரிக்கத் தலைவர்களுக்கு போட்ஸ்வானா அதிபர் அளித்த பரிசு, மற்றும் பிற செய்திகள்

யானைக்கால் பரிசு

போட்ஸ்வானாவில் பாலூட்டி விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மூன்று ஆஃப்ரிக்க தலைவர்களுக்கு யானைக்காலால் செய்யப்பட்ட ஸ்டூல் பரிசாக அளிக்கப்பட்டது.

நீல நிற துணியால் சுற்றப்பட்ட அந்த பரிசுப்பொருள் போஸ்ட்வானாவின் அதிபர் மோக்வே சிமாசிசேவால், நமீபியா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அதிபர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நாடுகள் மற்றும் தென் ஆப்ரிக்கா, யானை தந்தங்களை விற்பதற்கான தடையை நீக்குமாறு கோருகின்றன.

வர்த்தகத்தில் வரக்கூடிய பணத்தை விலங்குகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என இந்த நாடுகள் தெரிவிக்கின்றன.

ஆஃப்ரிக்கா முழுவதும் ஒவ்வொரு வருடமும் சுமார் 30,000 யானைகள் கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வெறும் 4 லட்சத்தும் 50 ஆயிரம் யானைகளே மிஞ்சியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த யானைக்கால்களால் ஆன ஸ்டூல்கள் பரிசாக வழங்குவதன் மூலம், போட்ஸ்வானா யானை தந்த வர்த்தகத்துக்கு தங்களின் ஆதரவு குறித்து வலுவான ஒரு செய்தியை சொல்கிறது என பிபிசியின் அலேய்ஸ்டர் லெய்ட்ஹெட் தெரிவிக்கிறார்.

இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை

12-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறும் பிளே ஆஃப் சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 மட்டையிலக்குடுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது மட்டையாட்டம்கை தொடங்கிய மும்பை அணி, இரண்டாவது பந்திலேயே அதன் கேப்டன் ரோகித் சர்மாவின் மட்டையிலக்குடை பறிகொடுத்தது.

இதை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக்கும் ஆட்டமிழந்தார். ஆனால் இதன் பின்னர் மும்பை அணி சாதுர்யமாக விளையாடி பெரிதும் மட்டையிலக்குடுகளை இழக்காமல் ஓட்டத்தை குவித்தது.

இறுதியில் 18.3 ஓவர்களில் மும்பை அணி தனது இலக்கை எட்டியது.

விரிவாக படிக்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது எதனால்? 5 முக்கிய காரணங்கள்

‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக இதை செய்தே ஆக வேண்டும்’

இயற்கையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை பாரீஸீல் நடந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது ‘அறிக்கை’ அல்ல மனித குலத்திற்கான ‘எச்சரிக்கை’.

அந்த அறிக்கையில் உள்ள சில முக்கிய தகவல்களை பிபிசியின் சூழலியல் செய்தியாளர் மேட் மெக்ராத் தொகுத்து தருகிறார்.

‘நாம் ஆபத்தில் இருக்கிறோம்’

இந்த அறிக்கையை தயாரித்த ஆய்வு குழுவிற்கு தலைமை வகித்த பேராசிரியர் சார் பாப் வாட்சன், ‘நாம் ஆபத்தில் இருக்கிறோம்’ என்கிறார்.

இந்த அறிக்கையானது பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

வாட்சன் இயற்கையை சூழ்ந்துள்ள ஆபத்து குறித்து விவரிக்கும் போது, ‘நாம் ஆபத்தில் இருக்கிறோம்’ என்று கூறினாலும், இந்த சூழலியலை காக்க முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கிறார்.

மீண்டும் ஒரு ஆணவக்கொலை

19 வயது ருக்மணி ரான்சிங் 6 மாதம் முன்புதான் தான் காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்டார்.

அந்த இளைஞன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் ருக்மணியின் பெற்றோரும் உறவினர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆத்திரம் கொண்ட ருக்மணியின் தந்தையும், மாமாவும், சித்தப்பாவும் சேர்ந்து ருக்மணியையும், அவரது கணவனையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

தமது குடும்பத்தின் கோபத்துக்கு தமது உயிரையே பலி கொடுத்துள்ளார் ருக்மணி.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பார்னர் வட்டத்தில், நிகோஜ் என்ற சிற்றூரில் ஆணவக் கொலை என்னும் இந்தக் கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது.

விரிவாக படிக்க: வேறு சாதி இளைஞனை திருமணம் செய்ததற்காக மகளை கொன்ற தலித் தந்தை

ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா?

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பிபிசியுடனான பிரத்யேக பேட்டியின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன பதிலளித்தார்.

கேள்வி: இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழு உங்கள் நாட்டை இலக்கு வைக்கும் என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இருந்ததா? அப்படியொரு கற்பனையை கூட செய்திருப்பீர்களா?

பதில்: உண்மையை சொல்வதென்றால், அப்படி நான் நினைத்ததே இல்லை. நான் அதிர்ச்சி அடைந்தேன். இலங்கையை ஏன் அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விரிவாக படிக்க:ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா? – சிறிசேன கேள்வி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.