Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் புகழ்பெற்ற சூஃபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 6 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் புகழ்பெற்ற சூஃபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் செய்தி ஊடகமான ஜியோ நியூஸ் செய்தியின்படி மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.

காவல் துறை வாகனம் ஒன்று தாக்கப்பட்டதாகவும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.

தெற்காசியவில் உள்ள மிகப் பழமையான சூஃபி புனிதத்தலத்தில் இந்த வெடிகுண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானில் ரமலான் நோன்பு தொடங்கியுள்ள சமயத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

மேலும் ஒவ்வொரு வருடமும் சுன்னி, ஷியா பிரிவை சேர்ந்த பலர் இங்கு வருகை தருவர்.

இந்த புனித்ததலத்தில் 2010ஆம் நடைபெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் டஜன் கணக்கானோர் உயிரிந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.