Press "Enter" to skip to content

மனநலம்: காலப்போக்கில் மறைந்துவிட்ட ஏழு உணர்வுகள்

உணர்வுகள் நிரந்தரமானவை, உலகெங்கும் ஒரே மாதிரியானவை என்று நாம் பெரும்பாலும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் இடத்துக்கு ஏற்ப உணர்வுகள் மாறுபடுகின்றன.

எப்போதும் புதிய உணர்வுகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு இது தெரியும். உணர்வுகள் – மற்றும் அவர்கள் அனுபவித்தவை, வெளிக்காட்டியவை மற்றும் பேசப்பட்டவை – எல்லாமே கூட காலப் போக்கில் மாறக் கூடியவை.

உணர்வுகளின் வரலாறு குறித்த மையத்தைச் சேர்ந்த நிபுணர் மருத்துவர் சாரா சானே உடன் நாங்கள் கலந்துரையாடினோம். அந்தப் பெண் நிபுணரும், அவருடைய சகாக்களும், மறைந்துவிட்ட உணர்வுகளின் இயந்திரம் என்ற அற்புதமான கருவியை Radio 3’s Free Thinking Festival -க்கு கொண்டு வந்தனர். இன்றைக்கு எப்படி உணர்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு உதவும் வகையில், கடந்த கால உணர்வுகள் பற்றி மக்களுக்கு கற்பிக்க இதைக் கொண்டு வந்தனர்.

எங்களுக்குப் பிடித்தமானவற்றில் சில இங்கே பட்டியலிடப் பட்டுள்ளன.

1.ஆன்மிக நெருக்கடி

நடுத்தர வயது உள்ளவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் – மடாலாயங்களில் வசிப்பவர்கள் – அனுபவித்த மிகவும் குறிப்பான உணர்வு Acedia என்பதாகும். ஆன்மிக நெருக்கடிகளில் இந்த உணர்வு பெரும்பாலும் உருவாகும். இந்த உணர்வு ஏற்பட்டவர்கள் மனக் கசப்பு, அலட்சியம், சோம்பலாக உணர்வார்கள். ஆன்மிக வாழ்வையே விட்டுவிடலாம் என்ற எண்ணமும் கூட ஏற்படும்.

“இப்போது இதை மன அழுத்தம் என்பது போன்று முத்திரை குத்துவார்கள்” என்கிறார் மருத்துவர் சானே. “ஆனால் acadecia என்பது குறிப்பாக ஆன்மிக நெருக்கடி மற்றும் மடாலயத்தின் வாழ்வின் காரணமாக ஏற்படும் உணர்வு” என்கிறார் அவர். கவனமற்ற நிலையுடன் சேர்ந்து ஆர்வம் இல்லாமல் ஏற்பட்ட வெறுப்பால் மடாதிபதிகளுக்கு கவலை தரும் விஷயமாக இது இருந்திருக்க வேண்டும்.

2. கட்டுக்கடங்காமை

“மத்திய காலத்துக்கு உரிய மற்றொரு நல்ல உணர்வு இது” என்று விவரிக்கிறார் மருத்துவர் சானே. “இது கோபத்தைப் போன்றது. ஆனால், இப்போது நாம் கோபம் என்ற உணர்வை பயன்படுத்துவதைவிட இன்னும் குறிப்பிடத்தக்க வகையிலானது. இந்த உணர்வுக்கு ஆளாபவர்கள் மிகவும் பதற்றமாக இருப்பார்கள். கோபத்தில் குத்துவதைப் போல செய்வார்கள், கட்டுப்பாட்டை இழந்து நிறைய கூச்சல் போடுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.

பாதுகாப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த உணர்வுக்கு ஆளாபவர்கள் அமைதியாக உட்காருவது சாத்தியமற்றது. உள்ளார்ந்த உணர்வுகளாக நினைக்கும் நவீனப் போக்கின் உணர்வாக இது இருக்கும். நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு முயற்சித்தால், இதை மறைக்க முடியும் என்பது போல இருக்கும். இடைக்காலத்தில் இந்த உணர்வை அனுபவித்தவர்களுக்கு மட்டும் பொருந்துவதாக இருக்காது.

“இந்த உணர்வுகளை விவரிக்க மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், ஒருபோதும் நம்மால் அனுபவிக்க முடியாது என்று கூறுவதைப் போல இருக்கும்” என்று மருத்துவர் சானே கூறினார். வரலாற்று காலத்தில் இருந்த பல உணர்வுகள் அந்த காலக்கட்டத்துக்கும், இடங்களுக்கும் உரியவையாக இருந்தன. இன்றைய காலக்கட்டத்தில் நாம் உணர்வதற்கு சாத்தியமற்றவையாக இருந்தன.

3. அச்சத்தால் ஏற்பட்ட உடல் துன்பம்

சோகம் அல்லது ஆழ்ந்த யோசனையில் உள்ள உணர்வுகளை விவரிப்பதற்கு melancholy என்ற ஆங்கில வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். “ஆனால் கடந்த காலத்தில் இதன் அர்த்தம் வேறு” என்கிறார் மருத்துவர் சானே. “நவீன காலத்தின் தொடக்கத்தில், melancholy என்பது அச்சத்தால் ஏற்பட்ட உடல் துன்பத்தைக் குறிப்பதாக இருந்தது” என்கிறார் அவர்.

16ஆம் நூற்றாண்டு வரையில், உடலின் நான்கு திரவங்களின் – ரத்தம், சளி, மஞ்சள் பித்தநீர், கருப்பு பித்தநீர் – ஆகியவற்றின் சமன்பாட்டால் தான் உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்ற நம்பிக்கை இருந்தது. கருப்பு பித்தநீர் அபரிமிதமாக இருக்கும் போது melancholy உணர்வு ஏற்படும்.

“அந்த காலக்கட்டத்தில் அச்சம் தான் melancholy-க்கான அறிகுறியாக இருந்தது. கண்ணாடியால் ஆனவர்கள் என்று மக்களை பயமுறுத்தி, உடைந்து போவீர்கல் என்று மிரட்டி அங்கிருந்து சென்று விடுமாறு சில நேர்வுகளில் அச்சுறுத்தி இருக்கிறார்கள்” என்று மருத்துவர் சானே கூறுகிறார். பிரான்சின் ஆறாவது மன்னர் சார்லஸ் இத்தகைய மாயத் தோற்ற உணர்வைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எதேச்சையாக உடைந்துவிடக் கூடாது என்ற உணர்வில், தன்னுடைய ஆடைகளுடன் இரும்புக் கம்பிகளை சேர்த்து தைத்து வைத்திருந்தார் என குறிப்பிடுகிறார்.

4. கடலோடிகளின் உடல் வலி

ஏற்கெனவே அறிந்தவை பற்றிய மற்றொரு உணர்வு nostalgia என்று நீங்கள் நினைக்கலாம். “இப்போது கலந்துரையாடல்களில் அடிக்கடி nostalgia என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்பத்தில் இது பயன்பாட்டுக்கு வந்தபோது உடலுக்கு ஏற்படும் ஒரு நோய் என்று கருதப்பட்டது” என்று மருத்துவர் சானே கூறுகிறார். “கடல் பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் நோயாக 18 ஆம் நூற்றாண்டில் கருதப்பட்டது. வீட்டில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும்போது, வீட்டில் இருப்பவர்களுக்காக ஏங்கும் போது ஏற்படும் நோய் என்று கூறப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.

நவீன காலத்து nostalgia என்பது போல அல்லாமல், 18ஆம் நூற்றாண்டில் nostalgia என்பது உடலில் அறிகுறிகளுடன் இணைந்ததாக இருந்தது. இந்த nostalgia பாதித்த கடலோடிகள் களைப்பாக, அலட்சியமாக, காரணம் தெரியாத வலிகள் உள்ளவர்களாக, வேலை செய்ய முடியாதவர்களாக இருந்தனர். தீவிர nostalgia பாதித்தால் மரணம் கூட ஏற்பட்டிருக்கிறது. பழைய நல்ல நினைவுகளுக்காக ஏங்கும் நவீன கால வரைமுறையுடன் ஒப்பிடும் வகையில் அந்தக் கால nostalgia இருக்கவில்லை.

5. பதுங்கு குழிகளில் இருந்த ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

முதலாவது உலகப் போரின்போது பதுங்கு குழிகளில் இருந்த ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டும் உணர்வு அது. Melancholy, Nostalgia மற்றும் வரலாற்றுக் காலத்தைய இன்னும் பல உணர்வு அனுபவங்களைப் போல, உணர்வுக்கும், நோய்க்கும் இடைப்பட்டதாக, அவற்றுக்கு எந்த வகையில் சிகிச்சை தரப்பட்டன என்ற அடிப்படையில் விநோதமான உணர்வாக இது இருந்திருக்கிறது.

“shell shock பாதித்தவர்களுக்கு விநோதமான தசைப் பிடிப்பு இருந்தது. பார்வை மற்றும் செவித் திறனை பெரும்பாலும் இழந்திருந்தனர். உடல் அளவில் எந்த பாதிப்பும் உள்ளதாகத் தெரியாவிட்டாலும் இந்தப் பாதிப்புகள் இருந்தன” என்று மருத்துவர் சானே தெரிவித்தார். “போரின் தொடக்கத்தில், குண்டுவெடிப்புகளுக்கு அருகில் இருந்ததால், உடல் ரீதியாக மூளையை அது பாதித்தது என்பதற்கான அறிகுறியாக இதை நினைத்திருந்தார்கள். பின்னர் நோயாளியின் அனுபவங்கள் மற்றும் உணர்வு நிலை காரணமாக இந்த அறிகுறிகள் தோன்றின என்று நினைத்தார்கள்” என்று அவர் விவரித்தார்.

6. உடலைப் பற்றிய எதிர்மறையான கவலை

Hypochondriasis என்பது 19 ஆம் நூற்றாண்டில் உணவு தொடர்புகள் கொண்ட மற்றொரு மருத்துவ சூழ்நிலையை உணர்த்தும் சொல்லாக இருந்தது. “விக்டோரியா காலத்து மருத்துவர்கள் ஹிஸ்டிரியா என்று கூறிய நோயின் ஆண்களுக்கான பரிமாணமாக இது அடிப்படையில் கருதப்பட்டது” என்று மருத்துவர் சானே கூறினார். “களைப்பு, வலி, செரிமாணக் கோளாறுகளை இது உருவாக்குவதாகக் கருதப்பட்டது. மண்ணீரலால் hypochondriasis நோய் உருவாகிறது என்று 17 மற்றும் 18வது நூற்றாண்டுகளில் கருதப்பட்டது. ஆனால், நரம்புகளால் இது ஏற்படுகிறது என்று பின்னர் உணரப்பட்டது” என்று அவர் கூறினார்.

Hypochondriasis அல்லது உடலைப் பற்றிய எதிர்மறையான கவலையால் இந்த அறிகுறிகள் தோன்றுவதாக விக்டோரியா காலத்தவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதனால் உடலில் அறிகுறிகள் தோன்றுவதாக நினைத்தனர். மனம் மற்றும் உணர்வுகளால் இப்படி நடப்பதாக நம்பப்படுகிறது

7. உணர்வு ரீதியாக பித்துப் பிடித்த நிலை

Moral Insanity என்ற வார்த்தை 1835-ல் மருத்துவர் ஜேம்ஸ் கவ்லஸ் பிரிச்சர்டு என்பவரால் உருவாக்கப்பட்டது. “அது -உணர்வு ரீதியாக பித்துப் பிடித்த நிலை – என்பதைத் தான் அது குறிப்பிடுகிறது” என்று மருத்துவர் சானே கூறினார். “ஏனெனில் நீண்ட காலமாக moral என்ற வார்த்தை `உளவியல்,’ `உணர்வுப்பூர்வமான’ என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் `moral’ என்பது இப்போது நாம் குறிப்பிடும் அர்த்தத்திலும் அர்த்தம் செய்து கொள்ளப் பட்டது” என்று அவர் தெரிவித்தார்.

“இயல்புக்கு மாறாக அல்லது கோளாறு உள்ளவர்களாக நடந்து கொண்ட நோயாளிகளை – morally insane- என்று பிரிச்சர்டு குறிப்பிட்டார். அவர்களிடம் மன ரீதியில் கோளாறு இல்லாவிட்டாலும் இந்த நிலையில் இருப்பவர்களை அவ்வாறு குறிப்பிட்டார். “மற்றவர்களைப் போல செயல்படக் கூடிய பெரும்பாலான நோயாளிகளால், உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது அல்லது எதிர்பாராத விதமாக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கல் என அவர் கருதினார்” என்கிறார் சானே.

உதாரணத்துக்கு Kletomania என்பது கற்றறிந்த பெண்களின் சமூகத்தைப் பற்றியது. அவர்கள் திருடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதால் இந்தப் பழக்கம் அவர்களுடைய moral insanity -க்கான அறிகுறியாக பார்க்கப் படுகிறது. “அடிப்படையில் தீவிர உணர்வுகளைப் பொருத்த வரை எல்லோருக்குமானதாகவும், பெரும்பாலும் சிரமமான குழந்தைகளுக்குப் பொருந்துவதாகவும் இருக்கிறது” என்கிறார் சானே.

சில நேரங்களில் சில குழந்தைகளை “morally insane” என்று கூறுவதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.