Press "Enter" to skip to content

ஜெர்மனி நாஜி ஆட்சியில் கொல்லப்பட்ட 300 பேரின் திசுக்கள் கண்டெடுப்பு மற்றும் பிற செய்திகள்

ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் திசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இன்று (திங்கட்கிழமை) புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்லி பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் உடற்கூறியல் பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த மாதிரிகள் நுண்ணிய ஸ்லைடுகளில் காணப்பட்டன.

1952ஆம் ஆண்டு உயிரிழந்த அந்த மருத்துவரின் வாரிசுகள், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மாதிரிகளை கண்டறிந்தனர்.

ஹிட்லரின் ஆட்சியை எதிர்த்த அரசிய கைதிகளை கொலை செய்த பின், அவர்களது உடல்களை பெற்று திசுக்களை சேகரிக்கும் பணியை ஸ்டீவ் நாசிகளுடன் சேர்ந்த திட்டமிட்டு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு மில்லி மீட்டர் நீளமே உள்ள அந்த திசுக்களை சேகரித்த ஸ்டீவ் அவற்றை சிறிய கறுப்பு நிற பெட்டிகளில் அவர்களது பெயர்களுடன் சேகரித்து வைத்திருந்தார்.

நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்

ஹைதராபாத்தில் நடந்த 12-வது ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில், 1 ஓட்டத்தை வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

மிகவும் பரபரப்பான இந்த போட்டியில், சிஎஸ்கே அணி கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி பந்துவரை, அதிக அளவில் ரன்களை வாரிவழங்கி அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்கா, ஒரேபந்தில் கதாநாயகனானார்.

கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ஓட்டத்தை எடுத்தால் சூப்பர் ஓவருக்கு போட்டி செல்லும் என்ற நிலையில் மலிங்கா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஷரதுல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் 7 மட்டையிலக்குடுகள் இழப்புக்கு 148 ஓட்டங்கள் மட்டுமே சென்னை எடுத்ததால் ஒரு ஓட்டத்தை வித்தியாசத்தில் மும்பை வென்றது.

விரிவாக படிக்க:ஐபிஎல் சாம்பியனானது மும்பை இந்தியன்ஸ்; பரபரப்பான போட்டியில் சிஎஸ்கே தோல்வி

பாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்

சர்வதேச தொண்டு நிறுவனமான மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானில் நடைபெறும் சம்பவங்கள், பிற ஐந்து ஆசிய நாடுகளில் நடக்‍கும் சம்பவங்களுடன் ஒத்துபோகின்றன.

இவ்விவகாரம் தொடர்பாக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த ஆண்டு இதே காரணங்களுக்‍காக சீன மக்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள், பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்துகொண்டு சீனாவுக்கு அழைத்துச் செல்வதாகவும், அவர்களின் நோக்கம் திருமண உறவுகளை வளர்ப்பது அல்ல என்றும், மாறாக சர்வதேச அளவிலான பாலியல் தொழிலே என்றும் கூறியுள்ளனர்.

விரிவாக படிக்க:பாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: ‘சர்வதேச பாலியல் தொழிலுக்கு ஒரு முக்கிய ஆதாரம்’

பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்

பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளனர்.

சண்டே டைம்ஸ் நாளிதழ் இந்த பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா இருவரும் கடந்த ஆண்டில் 1.356 பில்லியன் பவுண்டுகள் லாபத்துடன் மொத்தம் 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் இருப்பதாக அந்நாளிதழ் கணக்கிட்டுள்ளது.

கடந்தாண்டு பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த ரசாயன நிறுவனத்தின் உரிமையாளர் ஜிம் ரேட்கிளிஃப் இந்தாண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும், இப்பட்டியலில் உள்ள வேலரி மோரன், முதன்முறையாக இதில் இடம்பெற்றுள்ள கறுப்பின பெண் தொழிலதிபர் ஆவார்.

விரிவாக படிக்க:பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்

இலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது?

இலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்திருக்கலாம் என்பதை அறியவருவது அந்நாட்டு மக்களில் பலருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

இத்தகைய பேரழிவை உண்டாக்கிய தொடர் குண்டுவெடிப்புகளை சிறியதொரு குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது?

வில்பத்து தேசிய பூங்காவுக்கு அருகில் ஒரு தென்னந்தோப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் வெடிபொருட்கள் மற்றும் 100 வெடிக்கும் கருவிகளை இலங்கை காவல்துறை எதிர்பாராத விதமாக ஜனவரி மாத நடுவில் கண்டுபிடித்தபோதே, தாக்குதல் நடைபெறுவதற்கான துப்புகள் கிடைத்திருந்தன. இந்த பகுதி இலங்கையின் மேற்கு கடற்கரை ஓரத்தில் புத்தளம் மாவட்டத்தில் தொலைவில் இருந்த காடாகும்.

விரிவாக படிக்க:இலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.