Press "Enter" to skip to content

ஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில் தாக்குதல் மற்றும் பிற செய்திகள்

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் மீண்டுமொருமுறை மோதி உள்ளது ஹாங்காங் காவல்துறை.

கடந்த பத்து வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹாங்காங் மக்கள் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவுகிறது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியது காவல்துறை.

வான் சாய் மாவட்டத்தில் காவல் துறையினர் மீது கல்லெண்ணெய் குண்டுகளையும், செங்கற்களையும் போராட்டக்காரர்கள் வீசினர். அரசு ஊழியர்கள் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் காயமடைந்தனர். சுரங்கநடைபாதை ஒன்றில் போராடும் மக்களுக்கு மிக நெருக்கமாக நின்று ரப்பர் குண்டுகளால் காவல் துறையினர் சுடும் காட்சி பதிவாகி உள்ளது.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் தொடங்கியது.

ஹாங்காங் அரசு அந்த மசோதாவை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்தவிட்டது. ஆனால், மக்கள் அந்த மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும் என்று கோரி போராடி வருகிறார்கள்.

ஸ்ரீநகரில் பக்ரித் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுமா?

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்து ஒரு வாரம் முடிவடைய உள்ளது. ஆறாவது நாளான இன்று ஸ்ரீநகரில் என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் அமீர் பீர்ஸாடா.

அவர் இன்று மாலை 4 மணியளவில் பிபிசி செய்தி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, அங்கு நிலவும் சூழ்நிலையை பதிவு செய்தார்.

“இன்று காலை முதல் ஸ்ரீநகரில் நிலைமை இயல்பாகவே இருந்தது. வீதிகளில் வாகனங்கள் செல்வதை பார்க்க முடிந்தது. போக்குவரத்து நெருக்கடி கூட ஏற்பட்டது. எல்லாம் இயல்பாகவே காட்சியளித்தது.

விரிவாகப் படிக்க:ஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை? – களத்தில் இருந்து பிபிசி

“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்” – கோட்டாபய ராஜபக்ஷ

வட மாகாண தமிழ் மக்கள் இதுவரை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.

விரிவாகப் படிக்க:“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்” – கோட்டாபய ராஜபக்ஷ

கேரளா வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகளால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மட்டும் இதுவரை 72 உயிரிழந்துள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகளுக்கு சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

விரிவாகப் படிக்க:கேரளா வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

ரஜினிகாந்த்: “காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது”

அமித் ஷாவும் நரேந்திர மோதியும், கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்று ரஜினி வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்ட 330 பொது நிகழ்ச்சிகளின் விவரங்களை ‘லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்’ எனும் அந்த நூல் விவரிக்கிறது.

விரிவாகப் படிக்க:“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” – ரஜினிகாந்த்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com