Press "Enter" to skip to content

பிரியங்கா சோப்ராவை அமெரிக்காவில் கபடதாரி என விமர்சித்த பாகிஸ்தான் பெண் – நடந்தது என்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த காலக்கட்டத்தில் போரை ஆதரித்தார் திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

என்ன நடந்தது?

லாஸ் ஏஞ்சலீஸில் சோப்ரா இடம்பெறும் அழகு மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பிரியங்கா சோப்ராவை கபடதாரி என அழைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிரியங்கா, “Jai Hind #IndianArmedForces”, என ட்வீட் செய்திருந்தார்.

அந்த சமயத்தில் இருநாடுகளுக்கு இடையே போர் வரலாம் என்ற அளவுக்கு பதற்றம் நிலவியது.

அமெரிக்காவில் நடந்த ப்யூட்டிகான் விழாவில் ப்ரியங்கா சோப்ரா கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் பெண்ணான் ஆயிஷா மாலிக் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் பேசிய ஆயிஷா, “நீங்கள் (சோப்ரா) மனிதநேயம் குறித்து பேசுவது எனக்கு வியப்பாக உள்ளது. உங்கள் பக்கத்து நாட்டை சேர்ந்த பாகிஸ்தானியான எனக்கு தெரியும், நீங்கள் ஒரு கபட வேடதாரி” என்று பேசி உள்ளார். அந்தக் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர், “நீங்கள் அமைத்திக்கான யூனிசெஃப்பின் தூதர். ஆனால், நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத யுத்தத்தை ஆதரிக்கிறீர்கள். இந்த மாதிரியான யுத்தத்தில் யாரும் வெல்லப் போவதில்லை” என அவர் குறிப்பிட்டார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.

போரை விரும்பவில்லை

2016ம் ஆண்டு முதல் யுனிசெஃப்பின் அமைதிக்கான தூதுவராக இருக்கும் பிரியங்கா, “எனக்கு பாகிஸ்தானில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் போர் பிரியர் அல்ல. ஆனால், நான் ஒரு தேசபக்தர்” என குறிப்பிட்டார்.

அதே சமயம் ஆயிஷாவின் தொனிக்காக அவரை கடிந்துக் கொண்டார்.

பிரியங்கா, “நாம் அன்பை பரிமாறத்தான் இங்கே இருக்கிறோம். கத்தாதீர்கள்” என்றார்.

பிப்ரவரி மாதம், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு பயங்கரவாத குழுவின் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டப் பின், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பகுதியில் இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்கியது.

அம்பானியின் ரிலையன்சில் சௌதி அரசின் அரம்கோ முதலீடு செய்வது ஏன்?

நன்கு அறியப்பட்ட செளதி அரேபிய அரசு நிறுவனமான அரம்கோ, ரிலையன்ஸின் பெட்ரோலிய எண்ணெயில் இருந்து ரசாயனம் தயாரிக்கும் வணிகத்தில் 20% பங்கு முதலீடு செய்யும் என்று திங்களன்று நடைபெற்ற தனது நிறுவனத்தின் 42வது ஆண்டுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

அரம்கோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு 75 பில்லியன் டாலர்கள். முகேஷ் அம்பானி, ஒழுங்குமுறை முகமைகளிடமிருந்து நிறுவனங்களுக்கு இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

விரிவாகப் படிக்க:ரிலையன்சில் சௌதி அரசு நிறுவனம் முதலீடு செய்வது ஏன்?

காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து சமூக விரோதிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள்

காஷ்மீரின் செளரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறி சம்பவம் நடந்ததாக இந்திய அரசு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.

விரிவாகப் படிக்க:காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதாக அரசு தகவல்

கேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு நூறாக்கிய பாதிப்புகள்; திண்டாடும் மக்கள்

கேரளாவில் கடந்த வாரம் பொழிந்த பலத்த மழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இன்றைய (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, இதுவரை கேரளா முழுவதும் பொழிந்த அடைமழை (கனமழை)யின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

விரிவாகப் படிக்க:கேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு நூறாக்கிய பாதிப்புகள்; திண்டாடும் மக்கள்

காஷ்மீரில் நொடி நொடியாக கழிந்த 5 நாட்கள் – ஒரு மாணவியின் நேரடி அனுபவம்

அதிக வன்முறை மற்றும் துரோகத்தை சந்தித்துள்ள, மோதல் நடைபெறும் பகுதிகளில், எந்தவொரு தகவலும் சரியானதைப் போல கருதப்படும் சூழ்நிலையில்தான், போலிச் செய்திகளின் தாக்கத்தை அதன் முழுமையான அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியும். வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை மாலை வரை வெவ்வேறு மக்கள் சொல்வதைக் கேட்டபடி நாங்கள் அமர்ந்திருந்தோம்.கூடுதல் ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, யாத்ரிகர்களும், காஷ்மீரி அல்லாதவர்களும் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது ஆகியவை பற்றி அவர்கள் பேசினார்கள். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.

விரிவாகப் படிக்க:காஷ்மீரில் அனுபவித்த 5 நாள் போராட்டம்: ஒரு மாணவியின் டைரி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »