Press "Enter" to skip to content

ஆண்களிள் ஊதியத்தை பெண்கள் அறிந்து கொள்வது ஊதிய பாகுபாட்டை குறைக்குமா?

ஊதியப் பாகுபாடு இருப்பதாக சந்தேகித்தால், தங்களுடன் பணியாற்றும் ஆண்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை அறிய பெண்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று பாலின சமத்துவத்துக்கான தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஊதிய வேறுபாடுகளை குறைக்க சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என ஃபாசெட் சொசைட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் ஆண்கள் தங்கள் ஊதியத்தை வெளிப்படையாக பெண் சகாக்களிடம் சொல்வதன் மூலம் பெண்கள் சம உரிமை பெற உதவ முடியும் என்று அந்த தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

2030ம் ஆண்டிற்குள் பாலின வேறுபாடின்றி சமமான ஊதியம் வழங்க வகை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்ற, இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

”ஊதியம் வெளிப்படையாக தெரிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்படுவதால் பெண்களுக்கு சமமான மற்றும் நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது தெரியாமலே போய்விடும்,” என ஃபாசெட் சொசைட்டியின் தலைமை நிர்வாகி சாம் ஸ்மிதர்ஸ் தெரிவித்துள்ளார்.

”மேலும் ஆண் ஊழியர் ஒருவருக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்தாலும் பெண்களால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது. எனவேதான் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கேட்கிறோம்.”

சமமற்ற ஊதியத்திற்கு எதிராக சவால் விடுக்கவும் பெண்களுக்கு தங்களுடன் பணியாற்றும் ஆண்களின் ஊதியத்தை அறிந்துகொள்ளும் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சாம் ஸ்மிதர்ஸ் கூறினார்.

பிரவுன் ஷிபிலேயின் முதலீட்டு இயக்குநர் ஷாந்தி கெலிமென் பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் ”பெண்களுக்கு மட்டும் மற்றவர்கள் ஊதியத்தை தெரிந்துகொள்ளும் உரிமைகள் வழங்கப்படுவது, இதற்கு தீர்வாகாது. சிறுபான்மையினர், முதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுமா,” என்று கேள்வியெழுப்பினார்.

”நான் இது போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தப் போகிறேன் என்றால், ஸ்வீடன் நாட்டில் உள்ள ஒரு திட்டத்தை பயன்படுத்துவேன், அங்கு யார் வேண்டுமானாலும் ஒருவரின் வரி விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அங்கு உங்கள் விவரங்களை பிறர் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்,” என்றும் ஷாந்தி கெலிமென் கூறினார்.

பிரிட்டன் சட்டத்தின்படி ஆண், பெண் இருவருக்கும் வேலைக்கு ஏற்றவாறு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

கே கோலின் சமையல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆனால் செப்டம்பர் 2015இல் தன் சக ஆண் ஊழியருடன் உரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தன் சக ஆண் ஊழியரின் ஊதியத்தை அறிந்த பிறகு தன் பணியில் இருந்தே விலகினார்.

கே கோலின் சமையல் கலைஞராக பணியாற்றினார், தனது ஆண் சகாவும் அதே சமையல் கலைஞர் பணியிலேயே ஈடுபட்டிருந்தார். ஆனால் அவரைவிட 6000 பவுண்டுகளை அவரின் ஆண் சகா அதிகமாக பெற்று வந்தார். இதை கேட்டவுடன் மிகவும் கோபமடைந்ததாக கூறினார்.

அவர் தனது ஆண் சக ஊழியரைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். எனவே இது குறித்து தன் பெண் மேலாளரிடம் கே கோலின் முறையிட்டார். ஆனால் அந்த பெண் மேலாளர், ஆண் ஊழியருக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன என்று கூறி தீர்வு காண மறுத்துவிட்டார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கே கோலினின் ஆண் சகாவும் தன் பணியை விட்டு விலகினார். இதனால் கே கோலினும் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு சேர வேண்டிய தொகை தீர்ப்பாயத்தில் இருந்து வந்து சேர்ந்தது.

ஆனால் எனக்கு வந்த தொகை நீதிமன்ற செலவான 15,000 பவுண்டுகளை கூட ஈடு செய்யவில்லை.

தனக்கு துரோகம் இழைக்கப்பட்டது என்ற கவலையில் கே வீட்டிலேயே இருந்துவிட்டார். தற்போது அவரது கணவர் வில்லியமை முழு நேரம் அருகில் இருந்து பார்த்துக்கொள்கிறார். அவரது கணவர் இதய நோயாளி, இருப்பினும் தங்களின் தேவைகளுக்காகவும் கடன்களை திருப்பிச்செலுத்தவும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com