Press "Enter" to skip to content

55 லட்சம் ரசிகர்களை கொண்ட இந்த பூனையை இனி பார்க்க முடியாது

இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது.

சமூக வலைதளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி திங்கள்கிழமை அறிவித்தார்.

குமிழ் வடிவான கண்கள், எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் லில் பாப் பூனை மிகவும் பிரபலமானது.

காட்டு பூனைக்குட்டியாக மீட்கப்பட்ட இந்த லில் பாப், வளர்ச்சிக்குறைவு நோய் (குள்ளத்தன்மை) உள்பட பல உடல்நல பிரச்சனைகளோடு பிறந்திருந்தது.

லில் பாப் பூனை வாழ்ந்தபோது, விலங்குகளுக்கு சேவை செய்வதற்கு ஏழு லட்சத்திற்கு அதிகமான டாலர் நிதி திரட்டுவதற்கு உதவியது என்று மைக் பிரிடாவ்ஸ்கி கூறினார்.

உலக விலங்குகளின் நலத்திலும், உலக நாடுகளிலுள்ள மில்லியன்கணக்கான மக்களிடமும் லில் பாப் பூனை பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவு குறிப்பிடுகிறது,

தனித்தன்மையான தோற்றத்தால் இணையத்தில் லில் பாப் பிரபலமடைந்தது, லில் பாப்-பின் வளர்ச்சிக்குறைவு நோயால், வாழ்க்கை முழுவதும் பூனைக்குட்டியை போலவே வாழ்ந்து வந்தது.

இயற்கைக்கு அப்பாற்பட்டு அதிகமான கை அல்லது கால் விரல்கள் கொண்டதாக இந்த பூனை இருந்தது. ஒவ்வொரு பாதத்திலும், ஒரு விரல் கூடுதலாகவும், சரியான வளர்ச்சியுறாத தாடையையும், பற்கள் இல்லாததால் நாக்கு வெளியே நீட்டி கொண்டு இந்த பூனை இருந்தது.

இந்தியானா மாநிலத்தில் நாற்காலி கூடாரம் ஒன்றில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டிருந்த பூனைக்குட்டிகளில் இருந்து லில் பாப்-யை பிரிடாஸ்கி எடுத்து வளர்த்தார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் “இயற்கையின் மகிழ்ச்சியான விபத்து” என்று இந்த பூனையை பற்றி குறிப்பிட்டு, பல்வேறு உடல்நல சிக்கல்கள் இருந்தாலும், இந்த பூனை மகிழ்ச்சியாக, சுகாதாரமாக வாழ்ந்ததாக தெரிவித்தார்.

2011ம் ஆண்டு “டம்லர்” வலைப்பூவை உருவாக்கிய பிரிடாஸ்கி, இந்தப் பூனையின் புகைப்படங்களை அதில் பகிர்ந்தார். டெட்டிட் இணையதளத்தின் முதல் பக்கத்தில் இடம்பெறும் அளவுக்கு இந்தப் பூனை விவாதங்களை ஏற்படுத்தியது.

கடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு 2 இவரது iamlilbub

View this post on Instagram

This is my first photo with BUB next our last photo together. On the morning of Sunday, December 1st 2019 we lost the purest, kindest and most magical living force on our planet. BUB was cheerful and full of love laying in our bed with us Saturday night, but unexpectedly passed away peacefully in her sleep.. I have always been fully transparent about BUB’s health, and it was no secret that she was battling a persistent and aggressive bone infection. Even knowing this, we weren’t expecting her to pass so soon or so abruptly without warning. I truly believe that she willingly made the decision to leave her failing body so that our family would not have to make that difficult decision ourselves. It is impossible to put into words the profound effect that BUB has had on my life, on the lives of thousands of homeless pets, and on the lives of those of you that have cared for her as if she were your own family. She taught me everything that I know about unconditional love, she brought my wife Stacy and I together, she’s the reason we have our beautiful children Rosco and Lula, and she has been a constant source of warmth and love in our lives for the past 8 years. To say that our family is devastated would be an understatement. But most importantly, BUB has made a huge difference in the world of animal welfare, and in the lives of millions of people worldwide. She has literally saved thousands of lives (both pets and humans), she started the first national fund for special needs pets, she was the subject of groundbreaking genetic and biological research, she’s helped raise over $700,000 for animals in need, and has spread a message of determination, positivity, and perseverance to people all over the world. And even though my heart is absolutely crushed by her graceful departure from planet Earth, I know that her sprit, magic, and overwhelming energy are still with us, reminding us every day to be better. Dearest BUB, I will never forget your generosity, your limitless supply of love, or your uncanny ability to bring so much magic and joy to the world. I am forever honored and humbled that you chose me as your caretaker. Please visit all of us in our dreams o

A post shared by Lil BUB (@iamlilbub) on

முடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் 2 இவரது iamlilbub

அதிக கவனம் பெற்றதால் இந்தப் பூனை பற்றி அதிக கட்டுரைகள் எழுதப்பட்டன. அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகளும் விடுக்கப்பட்டன.

பத்திர ஒப்பந்தங்களையும், வணிக ஒப்பந்தங்களையும் பெற்ற இந்த பூனை, யு டியூப் நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்பட தொடர்களையும் உருவாக்க காரணமாகியது.

இதன் நட்சத்திர பிரபலத்தை கொண்டு, பிரிடாஸ்கி அமெரிக்க விலங்கு வதை தடுப்பு நிறுவனம் மூலம் ஊனமுற்ற பிற பூனைகளுக்கு உதவுவது உள்பட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டினார்.

இறப்புக்கு முன்னர் இந்தப் பூனை எலும்பு நோய் தொற்றால் துன்பப்பட்டு வந்தது. இதன் உடல் நலம் பற்றிய தகவல்களை 24 லட்சம் பேர் பின்தொடர்ந்த இதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிடாஸ்கி பகிர்ந்து வந்தார்.

ஃபேஸ்புக்கில் இந்தப் பூனையை 30 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்தனர்.

மேட்டுப்பாளையம் விபத்து: 16 உடல்கள் எரியூட்டப்பட்டன – விரிவான தகவல்கள்

கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்று (திங்கள்கிழமை) ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அருகிலுள்ள வீடுகளின் மீது விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், 16 உடல்கள் மின் மயானத்தில் எரிக்கப்பட்டன.

இறந்தவர்களில் ஒருவரின் உடலை உறவினர் ஒருவர் கையெழுத்திட்டு பெற்ற நிலையில், மற்ற உடல்களை இரவு 7 மணி அளவில் காவல்துறையினர் சாந்திவனம் என்ற பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

தங்களின் கையெழுத்து இன்றி காவல்துறையினரே உடலை கொண்டு சென்றதாக இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

விரிவாக வாசிக்க: மேட்டுப்பாளையம் விபத்து: 16 உடல்கள் எரியூட்டப்பட்டன 

‘வாசி’ வானதி: மலைகளுக்கு நடுவே ஒரு சிறப்புப் பள்ளி #iamthechange

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இங்கு வகுப்பறைகள் என்று ஏதும் இல்லை. மரங்கள், பறவைகள், பூச்சிகள் எல்லாம்தான் ஆசான். அதனுடன் குழந்தைகளுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தரும் வேலையைத்தான் தான் செய்வதாக கூறுகிறார் வானதி.

விரிவாக வாசிக்க: ‘வாசி’ வானதி: மலைகளுக்கு நடுவே ஒரு சிறப்புப் பள்ளி

மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்: பா.ஜ.க. மாநில துணைத் தலைவருக்குத் தடை

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராவார் என பேசிய பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் கட்சிக் கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

விரிவாக வாசிக்க: மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்: பா.ஜ.க. மாநில துணைத் தலைவருக்குத் தடை

ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: “குற்றவாளிகளை கும்பல்கொலை செய்ய வேண்டும்” – ஜெயா பச்சன்

ஹைதராபாத்தில் 27 வயது பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது.

“இது கடுமையான ஒன்று என்பதை நான் அறிவேன். ஆனால், இது போன்ற குற்றவாளிகளை கும்பல் கொலை செய்ய வேண்டும்” என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார்.

விரிவாக வாசிக்க: ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: “குற்றவாளிகளை கும்பல்கொலை செய்க” – ஜெயா பச்சன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »