பிரான்ஸ்: மேயர் கனவுக்கு முடிவு கட்டிய ஆபாச காணொளி மற்றும் பிற செய்திகள்

மேயர் கனவு: அரசியல் வாழ்வுக்கும் கனவுக்கும் முடிவு கட்டிய ஆபாச காணொளி

ஆபாச காணொளி ஒன்று பிரான்ஸ் ஆளும் அரசின் மேயர் வேட்பாளரின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி உள்ளது. பாரிஸ் நகர மேயர் வேட்பாளராக களம் நின்றார் பெஞ்சமின்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான இவர் உடலுறவு கொள்ளும் காட்சி வைரலாக பரவியது. இதனை அடுத்து அவரது அரசியல் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.

ரஷ்யாவிலிருந்து வந்து பிரான்ஸில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள பீட்டர் என்பவர் இந்த காணொளியைப் பதிவேற்றியதாக தெரிகிறது. அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனைப் பதிவேற்றினேன் என்று கூறுகிறார் அவர். அதே நேரம், தனிப்பட்ட ஒருவரின் வாழ்வையும், அரசியல் வாழ்வையும் குழப்பிக் கொள்ளும் பழக்கம் பிரான்ஸில் இல்லை என ஆளும் அரசு கூறி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம்: தடியடி, கைது, விடுதலை; நள்ளிரவில் முடிந்த இஸ்லாமியர்கள் போராட்டம்

சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் மாநிலத்தில் பல பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கலைந்து சென்றனர்.

விரிவாகப் படிக்க:சி.ஏ.ஏ எதிர்ப்பு: தடியடி, கைது, விடுதலை; நள்ளிரவில் முடிந்த இஸ்லாமியர்கள் போராட்டம்

டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

குஜராத்தில் உள்ள ஒரு குடிசைப் பகுதி ஒன்று இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பார்வையில் படாமல் இருக்க, அதை மறைத்து சுவர் எழுப்பப்பட்டு வருவது விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி இந்தியாவுக்கு வரவிருப்பதைத் தொடர்ந்து அவர்கள் வரவேற்பு பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

விரிவாகப் படிக்க:டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

Coronavirus news: மின்சாரத்தை பயன்படுத்தி மருத்துவமனையில் இருந்து தப்பிய ரஷ்ய பெண்

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டார்.

இதை கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த பெண்ணை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அப்பெண் அதற்கு கடும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: மின்சாரத்தை பயன்படுத்தி மருத்துவமனையில் இருந்து தப்பிய பெண்

விஜய் படங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்சனைகளில் சிக்குவது ஏன்?

விஜயின் படங்கள் அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களின் படங்களில் இவ்வளவு பிரச்சனைகள் வந்ததில்லை. விஜய் படங்கள் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் குறித்துப் பார்க்கலாம்.

விரிவாகப் படிக்க:விஜய் படங்கள் தொடர்ந்து அரசியல் சர்ச்சையில் சிக்குவது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman