Press "Enter" to skip to content

கொரோனா சூழலில் மற்றொரு ஆபத்து: செர்னோபில் அணு உலையை நெருங்கும் காட்டுத்தீ மற்றும் பிற செய்திகள்

கொரோனாவை சூழலில் மற்றொரு ஆபத்து: செயல்படாத அணு உலையை நெருங்கும் காட்டுத்தீ

கடந்த சில தினங்களாக வடக்கு உக்ரைனில் பற்றி எரியும் காட்டுத்தீ மெல்ல செர்னோபில் அணு உலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீக்கும் செர்னோபில் அணு உலைக்கும் 2 கி,மீ தொலைவே இருப்பதாக அதனை நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

அதிகாரிகள் நினைப்பதைவிட அங்கு பெருந்தீ எரிந்து கொண்டிருப்பதாக க்ரீன் பீஸ் அமைப்பு கூறுகிறது. 1986 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட அணு உலை விபத்தை அடுத்து மக்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை. செயல்படாத அணு உலையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில்தான் மக்கள் வசிக்கிறார்கள். காட்டுத்தீயை அடுத்து ஏப்ரல் 5ஆம் தேதி உக்ரைன் சூழலியல் கண்காணிப்பு சேவை அமைப்பு ரேடியேசன் அளவு அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்தது.

300 தீயணைப்பு படை வீரர்கள் பகலிரவு பாராமல் தீயை அணைக்க பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா: புதிதாக 98 பேருக்கு தொற்று; 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் மேலும் 98 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொடர்பான தினசரி செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், நாட்டிலேயே இந்த நோயை எதிர்கொள்ள தமிழ்நாடுதான் சிறப்பான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் தற்போது வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,850. அரசுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 136. 28 நாட்கள் கண்காணிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை 63,380.

விரிவாகப் படிக்க:தமிழகத்தில் கொரோனா: புதிதாக 98 பேருக்கு தொற்று; 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அண்மைய தகவல்கள்

ஊரடங்கு உத்தரவால் உணவில்லாமல் குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்? – உண்மை என்ன? #BBCFactcheck

ஞாயிற்றுக்கிழமையன்று டிவிட்டரில் ஒரு செய்தி பலரால் பகிரப்பட்டது. சாதாரண மக்களால் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலராலும் இந்த செய்தி பகிரப்பட்டு வந்தது.

“உத்தரப்பிரதேச மாநிலம் பதோய் மாவட்டத்தில் தினக்கூலியாக இருக்கும் பெண் ஒருவர் முடக்கம் காரணமாக சாப்பாடு சரிவரக் கொடுக்க முடியாததால் தன்னுடைய ஐந்து குழந்தைகளை ஆற்றில் வீசினார்” என ஐஏஎன்எஸ் செய்தி முகமை கூறியுள்ளதாக அவுட்லுக்கில் வெளியான செய்திதான் அது.

விரிவாகப் படிக்க:ஊரடங்கு உத்தரவால் உணவில்லாமல் குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்? – உண்மை என்ன?

மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக 130கிமீ சைக்கிளில் பயணம் செய்த நபர் – ஒரு நெகிழ்ச்சி கதை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக 130கிமீ மீட்டர் தூரம் சைக்களில் பயணம் செய்துள்ளார் 63 வயது அறிவழகன்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இருக்கும் மணல்மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரின் 49 வயது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விரிவாகப் படிக்க:மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக 130கிமீ சைக்கிளில் பயணம் செய்த நபர் – ஒரு நெகிழ்ச்சி கதை

கொரோனா வைரஸ்: “மலேசியாவில் தொற்று பரவல் குறைவாகவே உள்ளது”

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மருத்துவ வல்லுநர்கள் யூகித்ததைவிட மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைவாகவே உள்ளது என்று சுகாதார அமைச்சின் பொதுச்செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: “மலேசியாவில் தொற்று பரவல் குறைவாகவே உள்ளது”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »