Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா? – இந்தக் கட்டுரை உங்களுக்கானது

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்?

எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள்.

காதுகளால் தொடர்பு கொள்ளுங்கள்

நண்பர்களை நம்மால் பார்க்க முடியாதபோது, நிறைய விடியோ கால்கள் செய்யும்சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆனால் காட்சிக் குறிப்புகள் இல்லாமல் உரையாடும்போது ஒருவருடைய உணர்வுகளை நம்மால் நல்ல முறையில் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

நமது வழிமுறைகள்

 • மௌனத்தின் வலிமை: தொலைபேசியில் இது கடினமான விஷயம். மௌனமாக இருந்தால் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் மௌனமாக இருப்பது நாம் நெருக்கமாக இருக்கிறோம், அவர்களை ஆதரவுடன் கவனிக்கிறோம் என்று காட்டுவதாக அர்த்தம். மௌனமாக இருக்கும் போது, நம்முடன் பேசுபவர் அதிக ஆக்கபூர்வ சிந்தனைகளை மேற்கொள்கிறார்.
 • சம அளவில் பேசும் வாய்ப்பு: நண்பர் அல்லது பெற்றோருடன் பேசும்போது, இரு தரப்பிலுமே சம அளவு நேரம் பேசுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். உங்கள் அம்மாவை தொலைபேசியில் அழைத்து 30 நிமிட நேரம் நீங்கள் பேசுவதால் எந்தப் பலனும் இல்லை.
 • ஆழமாகக் கவனித்தல்: அடுத்தவர் பேசுவதை ஆழ்ந்து கவனிக்கும்

நுட்பங்களின் மூலம், முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்ட உணர்வு அடுத்தவருக்கு ஏற்படும். அடுத்தவர் பேச்சை முழு கவனத்துடன் கேட்டபது நல்லது. கவனத்துடன் கேட்பது என்றால் என்ன? அவருடைய சொற்கள், கருத்துகள், உணர்வுகள் பற்றி நீங்கள் தீர்ப்பாக ஏதும் சொல்லாமல் தொடர்ந்து செவிமடுத்து, பிறகு அவர்கள் பேசியதன் சுருக்கத்தை தொகுத்துக் கூறுவது கவனத்துடன் கேட்பதன் அறிகுறி. இதன் மூலம் தங்கள் கருத்து கவனிக்கப்பட்டது என்ற எண்ணம் எதிர் முனையில் பேசுகிறவருக்கு வரும்.

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் கிறிஸ்டியன் வான் நியூவெர்பர்க் மற்றும் அமெரிக்க நியூரோ விஞ்ஞானி டேவிட் ஈகிள்மேன் ஆகியோரின் நிபுணத்துவத்தின் உதவியோடு இந்த கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.

உங்கள் கண்கள் மூலம் இணைந்திடுங்கள்

“கண்களின் தொடர்பை நாம் அதிகரிக்கும்போது, மற்றவர்கள் நம் மீது அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன” என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் வெர்ச்சுவல் மானிடர் கலந்தாடல் ஆய்வக நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஜெரெமி பாய்லென்சன் கூறியுள்ளார்.

ஆனால் பல செல்போன்களில் கேமராக்கள் அதன் ஒரு முனையில் இருப்பதால், விடியோ கால்கள் என்பது பிரச்சனையாக உள்ளன.

“ஒருவரை கண் பார்த்துப் பேசுதல் மற்றும் பேச்சு அல்லாத முகபாவனையைப் பார்த்து விஷயத்தை அறிதல் நிலையை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்” என்கிறார் பேராசிரியர் பாய்லென்சன்.

“கண்ணோடு கண் பார்க்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து வகையான சாதனங்கள் மூலமாகவும் விடியோ கான்பரன்ஸ் கம்பெனிகள் 30 ஆண்டுகளாக முயற்சி செய்து பார்த்துவிட்டன, யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.”

“நேர தாமதப் பிரச்சினை”- எதிர்முனையில் இருப்பவரின் அசைவுக்கும், திரையில் அதைப் பார்ப்பதற்கும், உங்களுடைய குரல் மற்றும் அசைவுகளுக்கும் இடைப்பட்ட காலம் ஆகியவை பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

கால் விநாடியில் 10-ல் ஒரு பாகமாக இருந்தாலும், அதுவும் கண்ணோடு தொடர்பு கொள்ளும் திறனைப் பாதிக்கிறது.

குறிப்பாக நாம் குழுவாக விடியோ உரையாடலில் இருக்கும்போது, “பார்வை அறிகுறிகளை” கவனிக்கும் இழப்பதால், உணர்வுகளை அறிதல் பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார், போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் பரிணாம வளர்ச்சி உளவியல் துறை பேராசிரியர் பிரிட்ஜெட் வால்லெர்.

“எல்லா உயிரினங்களை விடவும், மனிதர்களின் கண்களில் தான் அதிக அளவு வெண்மையான பகுதி உள்ளது. அது விழி வெண்படலம் எனப்படுகிறது. உங்களை வேறு யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பதைக் கண்டறிவதில் அதற்குத் தொடர்பு உள்ளது” என்று அந்த பேராசிரியை கூறுகிறார்.

“இந்தத் திறன் மனிதர்களுக்கு முக்கியமான திறன். ஆனால் குழு விடியோ காலில் எல்லோருமே திரையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதால், அதில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்த முடியாது.”

நமது வழிமுறைகள்

 • லேப்டாப்பை உயர்த்தி வையுங்கள்: அதாவது உங்கள் கேமரா உங்கள் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, உங்கள் கண் பார்வை உயரத்தில் உங்களை அது படம் பிடிக்கும்.
 • ஒரு ஸ்டிக்கரில் ஒரு முகத்தை வரைந்திடுங்கள்: கேமராவின் அருகில் அதை ஒட்டிக் கொண்டால், நீங்கள் அதைப் பார்க்கத் தூண்டுவதாக இருக்கும்.
 • உங்களுடைய தோற்றத்தை நீங்கள் பார்ப்பதை மறைத்திடுங்கள்: உங்கள் முகத்தையே நீங்கள் பார்த்துக் கொள்வதால் கவனம் மாறும் என்பதால், இதன் மூலம் அடுத்தவரை நீங்கள் கவனிக்கலாம்.
 • உங்களுடைய வெர்ச்சுவல் பின்னணியை மாற்றுங்கள்: எல்லோரும் ஒரே பின்புலத்தை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, தொடர்பில் இருக்கும் அனைவருமே பனை மரங்களால் சூழப்பட்டிருப்பதைப் போன்ற காட்சியை வைத்துக் கொள்ளலாம். காட்சி அளவில் ஒரே மாதிரி அம்சங்கள் இருக்கும்போது, ஒரே சூழலில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

தொடாமல் இணைந்திருத்தல்

ஆன்லைன் உரையாடலில் தொடுதல் இல்லாத நிலை மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு பேராசிரியராக இருக்கும் கேரே ஜெவிட் கூறியுள்ளார்.

“தொடுதல் தான் நமது முதலாவது உணர்வு. கருவில் இருக்கும் போதே இதை நாம் உணர்கிறோம். தகவல்களை அளித்தல் மற்றும் பெறுதலில் அது முக்கியமானது, பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானது” என்ற அந்தப் பேராசிரியை கூறுகிறார்.

உணர்வுகளுக்கும், தொடுதலுக்கும் பலமான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

பிரிட்டன் முழுக்கவே பெரும்பாலும் தொடுதலை வெறுக்கும் சமூகமாக இருந்தாலும், வாழ்த்திக் கொள்ளும்போது அவர்கள் தொடுகிறார்கள்.

உதாரணமாக, ஒரு பொது விடுதியில் நெருக்கமானவர்களுடன் இருப்பது சௌகரியமாக, இதமாக இருக்கிறது.

நாம் தொடாவிட்டாலும், நெருக்கமாக இருப்பதால், தொடுதலைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

உடலில் அணிந்து கொள்ளக் கூடிய சாதனம் மூலம் வெப்ப அதிர்வுகள் மற்றும் அழுத்தத்தை அனுப்புவதன் மூலம், தொடுதலைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேராசிரியை ஜேவிட்டின் குழுவினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

உடலில் அணியும் அந்த உடையை பரிசோதித்தபோது, துணைவரைப் பிடித்திருப்பது போன்ற உணர்வை அனுப்பிய போது, “என்னை ஒரு சாதனம் தான் தொடுகிறது என்றாலும், நீயே என்னை அணைப்பது போல நினைக்கிறேன்” என்று ஒரு பங்கேற்பாளர் தெரிவித்தார்.

நமது வழிமுறைகள்

 • தொடர்பை உணருங்கள்: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக நாம் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சவால்கள் ஏற்பட்டுள்ளன. நாம் எல்லோரும் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர் கொண்டிருக்கும், நினைவுக்கு எட்டிய காலத்தில் முதலாவது நெருக்கடியாக இது உள்ளது. உண்மையான பரிவைப் பரிசோதிப்பதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.
 • புதிய சமிக்ஞை தொகுப்புகளை உருவாக்குங்கள்: உதாரணமாக, உங்கள் இதயத்தை நீங்கள் தொட்டுக் கொண்டு, அங்கிருந்து வார்த்தைகளுக்குள் அடங்காத வலுவான உணர்வு புறப்பட்டுப் போய் திரை வழியாக தொடர்பை ஏற்படுத்துவது போல.
 • முக்கியத்துவத்தைக் காட்டுங்கள்: மிகுந்த நெருக்கத்தை உருவாக்குவதற்கு, உரையாடலின் ஆரம்பத்தில் தனிப்பட்ட விஷயம் பற்றி நேர்மையாக இருப்பதைக் காட்டுதல்.
 • பாதுகாப்பான இட வசதியை உருவாக்குங்கள்: குறிப்பாக நிச்சயமற்ற, தொடர்பு அளவீடுகள்: “இந்த அழைப்பு 30 நிமிட நேரம் கொண்டது. நீ எப்படி உணர்கிறாய் என்பது பற்றி பேசுவதற்கான ஒரு வாய்ப்பு இது. நீ என்ன சொல்கிறாய் என்பதைக் கேட்பதில் நான் உண்மையான ஆர்வம் கொண்டிருக்கிறேன்’ என்று பகிர்தல்.

இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மொத்தம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள்
மகாராஷ்டிரம் 2687 259 178
டெல்லி 1561 30 30
தமிழ்நாடு 1204 81 12
மத்தியப் பிரதேசம் 730 51 50
உத்திரப் பிரதேசம் 660 50 5
குஜராத் 650 59 28
தெலங்கானா 624 100 17
ஆந்திரப் பிரதேசம் 483 16 9
கேரளம் 387 211 3
ஜம்மு & காஷ்மீர் 278 30 4
கர்நாடகம் 260 71 10
மேற்கு வங்கம் 213 37 7
ஹரியாணா 199 34 3
ராஜஸ்தான் 176 14 12
பிகார் 66 29 1
ஒடிஷா 60 18 1
புதுவை 55 18 1
உத்திராகண்ட் 37 9 0
சத்தீஸ்கர் 33 13 0
இமாச்சல பிரதேசம் 33 13 1
அசாம் 32 0 1
ஜார்கண்ட் 24 0 2
சண்டிகர் 21 7 0
லடாக் 17 10 0
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 11 10 0
கோவா 7 5 0
பஞ்சாப் 7 1 0
மணிப்பூர் 2 1 0
மிசோரம் 1 0 0

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »