பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது

பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 100 பேர் இருந்ததாக ஏன்என்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை.

பாகிஸ்தானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்து விமான சேவை மீண்டும் துவங்கியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman