கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வரலாற்றில் நான்காம் முறையாக தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற செய்திகள்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வரலாற்றில் நான்காம் முறையாக தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விழா 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி நடக்க இருந்தது. ஆனால், தற்போது ஏப்ரல் 25-ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

அதே போல, பிரிட்டிஷ் திரைப்பட விருது விழாவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2020) வெளிவர இருந்த பல திரைப்படங்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிவரவில்லை.

இதற்கு முன்பு மூன்று முறை மட்டுமே ஆஸ்கர் விழா தள்ளி வைக்கப்பட்டது. 1938-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் வெள்ளத்தின் போதும், 1968-ல் மாட்டின் லூத்தர் கிங் கொல்லப்பட்டபோதும், 1981-ல் அதிபர் ரொலாண்ட் ரீகனை கொல்ல நடந்த முயற்சியின்போதும் மட்டுமே ஆஸ்கர் விழா ஒத்தி வைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஆஸ்கர் விழா நேரடியாக நடக்குமா அல்லது ஆன்லைனில் நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு

திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகள், பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை காவல் வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

விரிவாகப் படிக்க: சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு: 20 முக்கிய தகவல்கள்

பாகிஸ்தானில் இந்திய தூதரக ஊழியர்கள் கைது; அதே நாளில் விடுதலை

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் சில்வதேஷ் பால் எனும் வாகன ஓட்டுநர் மற்றும் தவாமு பிரகாமு எனும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் காணாமல் போன விவகாரத்தில், புதிய திருப்பமாக அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விரிவாகப் படிக்க: பாகிஸ்தானில் இந்திய தூதரக ஊழியர்கள் கைது; அதே நாளில் விடுதலை

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா 2-ம் அலை

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுகிறது என்ற அச்சத்துக்கு இடையே, கடந்த இரண்டு நாட்களில் தலா 36 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா 2-ம் அலை: ஒரே நாளில் 36 பேருக்கு தொற்று

இளம் வயதினர் கொரோனாவால் இறப்பது அதிகரித்துள்ளது ஏன்?

தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அக்டோபர் 2020 வரை அதிக அளவில் பரவும் என தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க: இந்தியாவில் இளம் வயதினர் கொரோனாவால் இறப்பது அதிகரித்துள்ளது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman