கொகோ கோலா: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தியது ஏன்? மற்றும் பிற செய்திகள்

கொகோ கோலா: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தியது ஏன்? மற்றும் பிற செய்திகள்

சர்வதேச குளிர்பான நிறுவனமான கொகோ கோலா சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

வெறுப்பு கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கு எதிரான பிரசாரம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்த விஷயத்தில் பொறுப்பு இருக்கிறது. அவர்களது தளத்தில்தான் இந்த கருத்துகள் பகிரப்படுவதால், இதற்கு எதிரான நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கும் சமீபத்தில், குறிப்பிட்ட சமூகத்தை, இனத்தை, மதத்தை, சாதியை, தேசத்தை, பாலினத்தை சிறுமைப்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் விளம்பரங்கள் தடை செய்யப்படும் என அறிவித்தார்.

இந்த சூழலில் கோலா நிறுவனம், “இனவாதத்திற்கு இந்த உலகத்திலும் இடமில்லை, சமூக ஊடகங்களிலும் இடமில்லை,” என்று கூறி உள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவும், அவர்களை பொறுப்பாக்கவும் அழுத்தம் தருவதற்காக முப்பது நாட்களுக்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்த கோலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மீண்டும் தொடங்கியது – இந்திய அரசு அழிக்க முயற்சி

சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவையே அச்சுறுத்திய வெட்டுக்கிளிகள் தொல்லை மீண்டும் உருவெடுத்துள்ளது. உணவுப் பயிர்கள் அவற்றால் உண்ணப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் வட இந்திய மாநிலங்களில் தொடங்கியுள்ளன.

வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை காலை பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் காணப்பட்டதாகவும் அவற்றை அழிப்பதற்கான குழுக்கள் அந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/india-53206475

இன்றைய கொரோனா வைரஸ் செய்தி: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன?

உலக சுகாதார நிறுவனத்தால் ‘பெருந்தொற்று’ என கொரோனா வைரஸ் பரவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பக்கத்தில் தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை என்ன என்பது குறித்த தகவல்களை அறியலாம்.

சனியன்று, தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் 3,000 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது.

விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/global-53167469

இந்திய – சீன எல்லை பதற்றம்: லடாக் நிலப்பரப்பின் பிரச்சனை என்ன?- வரலாற்றுத் தகவல்கள்

லடாக் அதன் இயற்கை அழகிற்கும், பயணிப்பதற்குக் கடினமான நிலப் பகுதிகளைக் கொண்டதற்கும் பெயர் பெற்றது. இப்போது இந்திய – சீன எல்லை சர்ச்சையின் மையமாக லடாக் அமைந்துள்ளது.

சமீபத்தில் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக், ஏரிகள், பனி படர்ந்த மலைகள் கொண்ட தனித்துவமான நிலப் பகுதி.

இந்த இமயமலைப் பகுதியின் நிலப் பரப்பை புரிந்து கொள்ளாமல், இப்போதைய இந்திய – சீன பிரச்சனையின் விவரங்களைப் புரிந்து கொள்வது சிரமம்.

விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/india-53199516

ரெம்டிசிவர், டோசிலிசம்ப்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்துகள் கொள்முதல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அளிக்கப்படும் டோசிலிசம்ப், ரெம்டிசிவர், ஏனாக்ஸாபரின் ஆகிய மருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது என்றும் மாவட்ட மருத்துவமனைகளுக்கும் அந்த மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை தருவித்து பயன்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் ஈடுபட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/india-53205958

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman