Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பொருளாதார சரிவு: வேலையிழக்கும் பல்லாயிரம் பேர் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் செலுத்தி உள்ள தாக்கம் காரணமாக உலகெங்கிலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இப்படியான சூழலில் உலகின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் 15 ஆயிரம் பணி வெட்டினை அறிவித்துள்ளது.

பிரிட்டனில் மட்டும் 1700 பேர் வேலை வாய்ப்பினை இழப்பார்கள். ஜெர்மன், ஸ்பெயின் மற்றும் பிற பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை இழப்பார்கள். ஊழியர் சங்கங்களுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறுகிறது அந்நிறுவனம்.

ஏர் பஸ் நிறுவனத்தின் உலகெங்கிலும் உள்ள அலுவலகத்தில் 134,000 பேர் வேலை செய்கிறார்கள்.

வான் போக்குவரத்தைப் பொறுத்தவரை 2023 வரை இயல்பு நிலை திரும்புவது கடினம் என்று கூறும் அந்நிறுவனம், ஏற்கெனவே உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகிறது.

சாத்தான்குளம்காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை தெரிவிக்கிறது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்துள்ளார்.

சாத்தான் குளம் தந்தை – மகன் ஆகியோர் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: சாத்தான்குளம்: அந்த இரவில் காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

டிக்டாக் உள்ளிட்ட செயலிகளின் தடை உலக வர்த்தக அமைப்பின் நெறிகளுக்கு எதிரானது

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்து வெளியிட்ட உத்தரவை எதிர்த்து சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கவுன்சிலர் ஜி ரோங் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்த நடவடிக்கை பாரபட்சமானது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் தடையால் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்- சீனா அறிக்கை

சாத்தான்குளம்: “என்கவுன்டர் கொலைகளை கொண்டாடும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம்“- வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை – மகன் இருவரும் சிறைக் காவலில் மரணம் அடைந்தார்கள் என்று சொல்வதை விட காவல் நிலைய வன்முறையில் கொல்லப்பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார் வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான சுதா ராமலிங்கம்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம், காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட வன்முறையால் நிகழ்ந்த மரணம் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் பேசப்படும் இந்த வழக்கின் காரணமாக, காவல் நிலையங்களுக்கு செல்ல நேர்கிறவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.

விரிவாகப் படிக்க: சாத்தான்குளம்: காவல்நிலையங்கள் அச்சம் தருவது ஏன்? – வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பேட்டி

நரேந்திர மோதி உரை: 8 முக்கிய தகவல்கள்

உலகில் உள்ள பிற நாடுகளை ஒப்பிடும்போது கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா உறுதியான நிலையில் உள்ளது. இதற்குக் காலத்தே எடுக்கப்பட்ட முடிவுகளும், நடவடிக்கைகளுமே காரணம் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்

’’அன்லாக்-1 தொடங்கியதில் இருந்து நாட்டில் சமூக மற்றும் தனிமனித நடத்தையில் கவனக்குறைவு வந்துவிட்டது. முன்பு முகக் கவசம் பயன்படுத்துவது குறித்து அதிகம் கவனம் இருந்தது. அடிக்கடி 20 விநாடிகளுக்கு கைகழுவதும் இருந்தது.’’ என்றார் மோதி.

விரிவாகப் படிக்க: நரேந்திர மோதி உரை: 8 முக்கிய தகவல்கள்; ஏழைகளுக்கு பல திட்டங்கள் அறிவிப்பு

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »