Press "Enter" to skip to content

உடலுறவு கொள்ள ஐ.நா தேரை பயன்படுத்திய ஊழியர்கள் இடைநீக்கம் மற்றும் பிற செய்திகள்

இஸ்ரேலில் ஐநாவின் அலுவலகப் பணிகளுக்காக இயங்கிவரும் காரில் பெண் ஒருவருடன் ஐநா ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்ட விவகாரம் தொடர்பாக, அப்போது அந்த காரில் இருந்த இரண்டு ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் ஐ.நா அனுப்பியுள்ளது

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் காணொளி கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வைரலானது.

‘UN’ என எழுதப்பட்ட அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பான விசாரணை முடியும் வரை அவர்கள் பணிக்கு வர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மட்டும் ஐ.நா ஊழியர்களுக்கு எதிராக 175 பாலியல் புகார்கள் இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டம் – என்ன நடக்கிறது?

ஹாங்காங் தொடர்புடைய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது சீனா. இதை உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

விரிவாக படிக்க: சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டம் – எதிர்க்கும் உலக நாடுகள்; தடைவிதிக்க அமெரிக்காவில் ஒப்புதல்

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஏழு வயதுச் சிறுமி படுகொலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் வசித்து வருபவர் நாகூரான். இவரது ஏழு வயது மகள் ஜெயபிரியா புதன்கிழமையன்று மதியம் காணாமல் போனார்.

விரிவாக படிக்க: புதுக்கோட்டையில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை

கொரோனா வைரஸ்: போலிச் செய்திகளால் இந்தியா கொடுக்கும் விலை

தவறான கண்ணோட்டங்களை அளிக்கக்கூடிய செய்தியோ, போலிச் செய்தியோ, யாரை இலக்காக கொண்டு வெளிவருகிறதோ, அவர்களுக்கு பெரிய ஆபத்தை அதனால் உருவாக்க முடியும்.

கொரோனா தொற்று பரவிவரும் இந்த காலத்தில், உண்மையான பல செய்திகள், இணையத்தில் சரிபார்க்கப்படாமல் வெளியாகும் ஏகப்பட்ட தகவல்களால் நசுக்கப்படுகின்றன. இது இந்தியாவில் குறிப்பாக முக்கிய பிரச்சனையாக உள்ளது.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ், டெல்லி கலவரம்: போலிச் செய்திகளால் பல்லாயிரம் கோடிகளை இழந்த இந்தியா

சாத்தான்குளம் சம்பவம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு

சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என தென்மண்டல காவல்துறைத் தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: சாத்தான்குளம் சம்பவம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »