Press "Enter" to skip to content

சுற்றுச்சூழலை காக்க புதிய முடிவெடுத்த ஜானி வாக்கர் விஸ்கி நிறுவனம் மற்றும் பிற செய்திகள்

சூழலியலுக்காக இந்த விஸ்கி நிறுவனம் என்ன முடிவெடுத்திருக்கிறது தெரியுமா?

இருநூறு ஆண்டுகள் பழமையான உலகப் புகழ் பெற்ற ஜானி வாக்கர் நிறுவனத்தின் விஸ்கி இனி பேப்பர் பாட்டில்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஜானி வாக்கர் நிறுவனம் தற்போது உலகின் மிகப்பெரிய மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சூழலியலுக்கு இணக்கமான இந்த முயற்சியை அடுத்த ஆண்டிலிருந்து சோதனை செய்து பார்க்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜானி வாக்கர் விஸ்கிகள் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில்களில் கிடைக்க, தனது பிற பிராண்டுகளில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வழிகளை ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது. கண்ணாடி பாட்டிகளும் கரியமில வாயு வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பேப்பர் பாட்டில்களை தயாரிக்க பல்பெக்ஸ் எனும் துணை நிறுவனத்தை டியாஜியோ தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் யுனிலீவர் மற்றும் பெப்ஸிகோ நிறுவனத்துக்குத் தேவையான பாட்டில்களையும் தயாரிக்கும்.

கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

விரிவாகப் படிக்க: உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளோம்: ரஷ்யா

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்குத் தலைவலியா? நடப்பது என்ன?

மத்தியப் பிரதேசத்தில் நடந்ததைப்போல ராஜஸ்தான் காங்கிரஸ் அரசும் சிக்கலில் உள்ளதாகத் தோன்றுகிறது. திங்கள்கிழமை நடந்த மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை.

ஆனாலும், ஆட்சிக்கு ஏதும் பிரச்சனை இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. கூட்டத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.

கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஒரு எம்.எல்.ஏ., எல்லாம் நல்லபடியாக இருப்பதாக கூறினார் என்றும் ஏ.என்.ஐ. தெரிவிக்கிறது.

விரிவாகப் படிக்க:சச்சின் பைலட் அதிருப்தி: ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்குத் தலைவலியா? நடப்பது என்ன?

கொரோனா பற்றி WHO: நிறைய நாடுகள் தப்பான வழியில் போகின்றன

நிறைய நாடுகள் தப்பான வழியில் செல்கின்றன. எனவே நிலைமை மேலும், மேலும் மோசமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சில நாடுகளின் அரசுகள் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த தொற்று மேலும் மோசமாகிக்கொண்டே போகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

இந்த தொற்றினைக் குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளில் அபாயகரமான அளவில் தொற்று அதிகரித்துக்கொண்டு செல்கின்றன என்றும் அவர் கூறினார்.

விரிவாகப் படிக்க:நிறைய நாடுகள் தப்பான வழியில் போகின்றன, நிலைமை மோசமாகும்: உலக சுகாதார நிறுவனம்

Breathe: Into the Shadows: தொடர் விமர்சனம்

அமேசான் பிரைமில் 2018ல் வெளியான Breathe தொடரின் அடுத்த பாகம். அந்தத் தொடரில் முக்கியப் பாத்திரமாக வந்த காவல்துறை அதிகாரி கபீர்தான் இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி.

மற்றபடி வேறு கதை இது. தில்லியில் வசிக்கும் அவினாஷ் சபர்வால் (அபிஷேக் பச்சன்) ஒரு மனநல மருத்துவர். அவருடைய மனைவி அபா (நித்யா மேனன்) ஒரு சமையற்கலை நிபுணர். அவர்களுடைய ஆறு வயதுக் குழந்தை சியாவுக்கு நீரிழிவு நோய் உண்டு.

விரிவாகப் படிக்க:Breathe: Into the Shadows: தொடர் விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »