பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங்குக்கு அமெரிக்க அரசு வழங்கும் சிறப்பு முன்னுரிமைகளை ரத்து செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
“சீன பெரு நிலப்பரப்பு எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதுபோலவே இனி ஹாங்காங்கும் நடத்தப்படும்,” என்று வெள்ளை மாளிகையில் உள்ள செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
பிரிட்டனின் முன்னாள் காலனியான ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் சீன பெருநிலப்பரப்பு பரப்பில் இல்லாத சில தனி சுதந்திரங்களை அனுபவித்து வருகிறது.
‘ஒரு நாடு இரு அமைப்பு முறை’ எனும் கொள்கையின் கீழ் ஹாங்காங்குக்கு சில சுயாட்சி அதிகாரங்களும் இருக்கின்றன.
ஆனால் சீனா இயற்றியுள்ள புதிய பாதுகாப்புச் சட்டம், 1984 ஆம் ஆண்டு சீனா மற்றும் பிரிட்டன் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஹாங்காங்குக்கான சிறப்பு உரிமையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
சமீபத்திய பாதுகாப்பு சட்டம் 1997ஆம் ஆண்டு ஹாங்காங் பிரிட்டனால் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பின்பு கொண்டுவரப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
இந்தச் சட்டம் ஹாங்காங்கில் இயங்கும் 1,300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது.
ஹாங்காங்குக்கு தற்போது அமெரிக்க குடிமக்கள் விசா இல்லாமலேயே பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் புதிய பாதுகாப்பு சட்டத்தால் இனி அவர்கள் சீனாவின் கடுமையான விசா விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஹாங்காங்கில் இருக்கும் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதித்து வருகிறது. இனி அமெரிக்காவின் வரி விகிதம் அதிகரிக்கப்படும் .
இந்நிலையில் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் ஹாங்காங் இடையே நடக்கும் பல நூறு கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை கேள்விக்குறியாக்கும்.

ராமர் குறித்த கருத்த – நேபாள அரசு விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
நேபாள பிரதமரின் ராமர் குறித்த கருத்து, அரசியல் கருத்து அல்ல, அது யார் மனதையும், உணர்வையும் புண்படுத்த கூறப்படவில்லை என அந்நாடு விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார்.

அரபு தேசத்தின் முதல் விண்வெளி பயணம்

பட மூலாதாரம், MBRSC
செவ்வாய் கிரகத்தை சென்றடைய ஏறத்தாழ 500 மில்லியன் (50 கோடி) கி.மீ தொலைவு பயணிக்க வேண்டும். இந்த விண்கலம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.
2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு.
இந்த திட்டத்திற்கு தலைமை தாங்குவது சாரா அல் அமிரி எனும் பெண்.

கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது.
ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.

சச்சின் பைலட் நீக்கம்

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த சச்சின் பைலட் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com