பட மூலாதாரம், ALASTAIR PIKE / Getty
அமெரிக்காவில், பில் கேட்ஸ், பராக் ஒபாமா, எலான் மஸ்க் போன்றோரின் ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டன.
இதுகுறித்து எஃப்.பி.ஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
அமெரிக்க செனட்டின் வர்த்தக கமிட்டி, ட்விட்டர் நிறுவனம் இதுகுறித்து ஜூலை 23ஆம் தேதியன்று விளக்கம் தர வேண்டும் என கோரியுள்ளது.
மேலும் பல அமெரிக்க அரசியல் தலைவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் ஜோஷ் ஹாவ்லெ, அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு விஷயத்தில் எந்த சமரசமும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
`பிட்காய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளிலிருந்து ‘பிட்காயின்’ எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடை அனுப்புமாறு கோரப்பட்டது.
“எல்லாரும் என்னை பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி அனுப்புகிறேன்” என பில் கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன.
இதற்கு பதில் நடவடிக்கையாக `வெரிஃவைட்` கணக்குகள் எனப்படும் நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகள் பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியது ட்விட்டர் நிறுவனம்.
கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் பதியப்பட்ட ட்வீட்டுகள் காரணமாக சில நிமிடங்களில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ட்விட்டர் கணக்குகள் மில்லியன் கணக்கான பின்தொடர்வோரைக் கொண்டுள்ளவை.
பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து ‘டெட்ரா குவார்க்’ என்னும் புது வகைத் துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது என்ற இயற்பியலின் அதிமுக்கியமான கேள்விக்கு விடை காணும் முயற்சியில் உத்வேகத்தோடு உழைக்கும் ஆர்வத்தை புதிய துகளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்குத் தந்துள்ளது.
இந்த டெட்ரா குவார்க் என்றால் என்ன, இதன் கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்ப்பதற்கு இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.
விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர் தற்கொலை முயற்சி

பட மூலாதாரம், SURAIH NIAZI / BBC
மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு தம்பதியரை அடித்து அவ்விடத்திலிருந்து போலீசார் வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் அந்த தம்பதியர் விஷ பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
மஞ்சள் இந்தியர்களின் கலாசாரத்தில் ஒன்றிணைந்தது எப்படி?

பட மூலாதாரம், MARK EDEN/ALAMY
சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக லண்டனில் புதிய காஃபி நிலையத்தில் ஒரு பானத்தை நான் பார்த்தபோது, என்னால் நம்ப முடியவில்லை.
மஞ்சள் பானம் (Turmeric Latte) என்று அதைச் சொன்னார்கள். பாதாம் அல்லது தேங்காய் பால் கொண்ட `பொன்னிற பால்’ என்பதாக அது இருந்தது. கருப்பு மிளகு, லவங்கப் பட்டை மற்றும் இனிப்புக்காக கருங்கற்றாழைச் சாறு அதில் சேர்த்திருந்தார்கள்.
அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய அணு வெடிப்பு

பட மூலாதாரம், UNIVERSITY OF WARWICK / MARK GARLICK
பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பைத் தொடர்ந்து அண்டத்தில் ஒரு நட்சத்திரம் அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில நட்சத்திரங்கள் ஆயுட்கால முடிவை எட்டும்போது நடைபெறும் சக்திமிக்க வெடிப்பு சூப்பர்நோவா எனப்படுகிறது; இந்த வெடிப்பு அதை அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டதாக இருக்காது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com