ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்: மரபணுவின் ரகசியங்களைக் கண்டுபிடித்த இந்த பெண் குறித்து தெரியுமா?

ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்: மரபணுவின் ரகசியங்களைக் கண்டுபிடித்த இந்த பெண் குறித்து தெரியுமா?

பட மூலாதாரம், Franklin Family

பிறந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும் தான் நினைவுகூரப்படுகிறோம் என்பதை விஞ்ஞானி ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் அறிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவார் என்கிறார் அவரது சகோதரி.

பிரிட்டனைச் சேர்ந்த ரோசலிண்ட் ஃபிராங்க்ளின் என்ற அறிவியலாளர் மரபணு குறித்த ஆராய்ச்சியை முதலில் தொடங்கியவர். மரபணு மூலக்கூறு வடிவத்தை முதலில் படம் பிடித்தவர் என்ற பெருமை இவர் பெற்றார்.

பின்னர் இவரது ஆய்வை பின்பற்றி, வாட்சன், கிரிக் ஆகிய அறிவியலாளர் மரபணு குறித்த பல முக்கிய விஷயங்களையும், ரகசியங்களையும் கண்டறிந்தனர்.

ஃபிராங்க்ளின் பதிவு செய்திருந்த மரபணுவின் எக்ஸ்ரே படமே, டி.என்.ஏவின் இரட்டை ஹெலிக்ஸ் வடிவத்திற்குப் புரிந்துகொள்ள வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோருக்கு உதவியது.

வாழ்க்கையில் வெகு சில காலங்களே வாழ்ந்த ரோசலிண்ட் ஃபிராங்க்ளின், அதில் பெரும்பாலான நேரத்தை மரபணு, வைரஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் செலவழித்தார்.

அவரது வாழ்க்கை, அறிவியல் துறையில் ஈடுபட பெண்களை ஊக்குவித்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்கிறார் 90 வயதான அவரது சகோதரி ஜெனிபர் க்ளின்.

மரபணுவின் ரகசியங்களைக் கண்டுபிடித்த இந்த பெண் குறித்து தெரியுமா?

பட மூலாதாரம், Franklin Family

லண்டனில் 1920-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்த ஃபிராங்க்ளின், தனது ஐந்து சகோதர சகோதரிகளுடன் வளர்ந்தார்.

1938-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் படிக்கத் தேர்வானார்.

”இரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க ஃபிராங்க்ளின் விரும்பினார். பள்ளியில் படிப்பு, விளையாட்டு என ஆல்ரவுண்டராக விளங்கினார். தான் ஒரு விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்” என்கிறார் ஜெனிபர் க்ளின்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்ஹாம் கல்லூரியில், தனது பெரும்பாலான நேரத்தைப் படிப்பதற்காகச் செலவிட்டார்.

ஆனால், இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு, வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க, ஒளிந்துகொள்ளும் முகாம்களில் தனது இரவுகள் கழிந்ததாக ஃபிராங்க்ளின் கூறியுள்ளார்.

1958-ம் ஆண்டு தனது 37வது வயதில் அவர் இறந்தார். உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் அவர் சிறந்து விளங்கினார் என்றும், சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியில் அவர் கவனம் செலுத்தினார் என்றும் கூறுகிறார் ஜெனிபர் க்ளின்.

தனது பிறந்தநாள் நூற்றாண்டின் போது மக்கள் தன்னை நினைவுகூர்கிறார்கள் என்பதை அவர் அறிந்தார் ஆச்சரியப்படுவார் என்கிறார் க்ளின்.

மரபணு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, ரோசலிண்ட் ஃபிராங்க்ளின் வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோருக்கு 1962-ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால், இந்த பரிசும், புகழும் கிடைக்கும் போது ஃபிராங்க்ளின் உயிருடன் இல்லை.

தற்காலத்தில் தான் ஒரு பெண்ணிய அறிஞராக இருப்பதை அறிந்தால், இதற்கும் நிச்சயம் ஆச்சரியப்படுவார். ஏனெனில் இதுகுறித்தெல்லாம் அப்போது அவர் யோசித்ததே இல்லை என்கிறார் க்ளின்

நியூன்ஹாம் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள சர்ச்சில் காப்பக மையம், ஃபிராங்க்ளினின் அறிவியல் ஆவணங்களை வைத்திருக்கின்றன. ஜூன் 25-ம் தேதி அவரது நூற்றாண்டை இந்த கல்லூரி நினைவுகூர்ந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Author Image
Nila Raghuraman