Press "Enter" to skip to content

திருடப்பட்ட பொம்மைக்காக காத்திருக்கும் தேசம் – ஒரு தாயன்பின் கதை

பட மூலாதாரம், mara soriano

திருடப்பட்ட பொம்மைக்காக காத்திருக்கும் தேசம்

“உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்; உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்; எப்பொழுதும் நான் உன்னுடனேயே இருப்பேன்.”

மரா சோரியனோவுக்காக அவரது தாய் மர்லின் கடைசியாகப் பதிவு செய்த சொற்களில் இதுவும் ஒன்று.

2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக இந்த குரல் பதிவு பொருத்தப்பட்ட ஒரு டெடிபியர் பொம்மையை மராவுக்கு வழங்கினார் அவரது தாய்.

அந்தப் பரிசை தன் மகளுக்கு வழங்கிய இரண்டு ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில் ஜூன் 2019ஆம் ஆண்டு மர்லின் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.

கனடாவின் வான்கூவர் நகரில் வசித்துவரும் மராவுக்கு அந்த டெடிபியர் குரல் பதிவை கேட்கும்போதெல்லாம் தன்னுடைய தாயின் நினைவுகள் வந்து மகிழ்ச்சியாக இருந்தார்.

ஆனால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 28 வயதாகும் மராவின் மகிழ்ச்சி அவரிடமிருந்து பிடுங்கப்பட்டு விட்டது.

அவரும் அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நபரும் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிமாறிய பொழுது அந்த டெடிபியர் திருடப்பட்டு விட்டது.

பொருட்களைக் கொண்டிருந்த வாகனத்திலிருந்து அவற்றை இறக்கி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது வாகன விபத்தில் சிக்கிக்கொண்ட அவரது நண்பர் ஒருவரிடம் இருந்து மராவுக்குக்கு அழைப்பு வந்ததாக மரா கூறுகிறார்.

அவரைப் பார்க்கச் செல்லும் முன்பு அந்த டெடிபியர் வைக்கப்பட்டு இருந்த பையை அவர் அந்த வாகனத்தின் அருகிலேயே வைத்து விட்டுச் சென்றார். ஆனால் கிளம்பிய அவசரத்தில் நான் தோழரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள இருப்பவரிடம் அந்த பையன் வைக்கப்பட்டுள்ளதை கூற மறந்து விட்டதாகவும், சற்று நேரத்தில் அங்கிருந்த பை காணாமல் போனது என்றும் அவர் கூறுகிறார்.

Mara Soriano: Celebs seek stolen teddy with dying mum's last message

பட மூலாதாரம், mara soriano

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவை பரிசோதனை செய்த பொழுது அங்கிருந்து ஒரு நபர் அந்த பையுடன் நடந்து செல்வது தெரியவந்தது.

அந்தப் பையில் பல முக்கிய ஆவணங்களும், மின்னணு உபகரணங்களும் இருந்தாலும் அதிலிருந்து தன்னுடைய தாயின் மிக்கி மௌஸ் பையும் டெடிபியரும்தான் மிகவும் முக்கியமானவை என்கிறார் மரா.

“அந்தப் பையைத் தொலைத்ததிலிருந்து என்மீது நானே கோபமாக இருக்கிறேன். இது முட்டாள்தனமாக தோன்றலாம். ஆனால் என்னுடைய தாயை நான் இன்னொரு முறை இழந்ததைப் போல உணர்கிறேன்,” என்கிறார் மரா.

மரா குழந்தையாக இருந்தபோது அவரது குடும்ப பிலிப்பைன்ஸில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தது.

18 வயதிலேயே தனது தாயை இழந்த மரா அந்த பையை திருப்பித் தருமாறு விடுத்த வேண்டுகோள் கனடிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது.

ஊடகங்கள் மட்டுமல்லாமல் உலகப்புகழ்பெற்ற பிரபலங்களும் மராவுக்கு அவரது தாய் வழங்கிய அன்புப் பரிசை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொம்மை இன்னும் திரும்பக் கிடைவில்லை என்றாலும் மராவும், அவருக்கு ஆதரவளித்தவர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Presentational grey line

நரேந்திர மோதி உரை: “இந்தியா சிறப்பாக செயல்படுகிறது”

இந்தியா சிறப்பாக செயல்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில்ஆகிய நகரங்களில்கொரோனா பரிசோதனை மையங்களைக் காணொளி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோதி, கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகதெரிவித்தார்.

இந்த புதிய மையங்களில் ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட 10,000 கொரோனா பரிசோதனைகளைச் செய்ய முடியும் என பிரதமர் மோதி தெரிவித்தார்.

Presentational grey line

அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ்: தற்சார்பு விவசாயியா அல்லது வலதுசாரிகளின் முகமா?

அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ்: தற்சார்பு விவசாயியா அல்லது வலதுசாரிகளின் முகமா?

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் அண்ணாமலை. முன்னாள் ஐ.பி.எஸ் ஆன இவர், இப்போது கரூர் அருகே தற்சார்பு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.

விவசாயம் செய்வதைக் கடந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல திட்டங்கள் வைத்திருப்பதாகக் கூறுகிறார்.

ஆனால் இவரை வலதுசாரி கட்சியின் இறக்குமதி என குற்றச்சாட்டுகிறார்கள் செயற்பாட்டாளர்கள்.

Presentational grey line

சாத்தான்குளம் இரட்டை மரணம்: உயிரிழந்த ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி

உயிரிழந்த ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி

பட மூலாதாரம், DIPR

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை இன்று வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.

Presentational grey line

47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை

47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட டிக்டாக், ஹலோ போன்ற சீன செயலிகளின் மாதிரி செயலிகளுக்கு (குளோன்) தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்த டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 செயலிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு தடை செய்தது.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள், இந்த செயலிகளை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், இந்திய அரசின் தடைக்குப் பிறகு அந்த செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் போனது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »