Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மீண்டும் வேகமாக பரவுகிறதா? – பல்வேறு நாடுகளில் அதிகரிக்கும் எண்ணிக்கை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இது.

அதுபோல திங்கட்கிழமை 381 பேர் கோவிட்-19 நோயால் பலியாகி உள்ளனர். அதுபோல ஆஸ்திரேலியா சுகாதார அமைச்சகமும், மக்களுக்கு கொரோனா தொடர்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. உடற்பயிற்சி கூடங்களிலிருந்து பரவ தொடங்கி இருக்கலாம் எனும் நம்பப்படும் புதிய கிளஸ்டர் அறியப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது அந்நாட்டு அரசு.

புதன்கிழமை வரை சிட்னியில் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் விக்டோரியா பகுதியில் கொரோனா தொற்று கணிசமான அளவில் குறைந்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 7,25,991ஆக உள்ளது.

அதுபோல பிரான்ஸிலும் மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இரண்டு என்ற அளவில் இருந்த சிவப்பு மண்டலங்கள் 21ஆக அதிகரித்துள்ளன.

NEET-JEE தேர்வுகளை தள்ளிவைக்க மோதி அரசு தயங்குவது ஏன்?

NEE-JEE தேர்வுகளை தள்ளிவைக்க மோதி அரசு தயங்குவது ஏன்?

பட மூலாதாரம், Hindustan Times/ Getty

ஐடி, பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் பற்றி தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், ஆன்மிக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஒலிக்கும் குரல்களைக் கேட்க முடிகிறது.

பல இடங்களில் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள், வீதிகளில் இறங்கி, தேர்வைத் தள்ளிவைக்கக் கோரி போராடுகிறார்கள். ஆனால், ஜேஇஇ தேர்வு தொடங்க இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ளன.

நரேந்திர மோதி அரசுக்கு வலுவில்லையா? சீன நாளிதழ் ஆய்வு வெளியிடும் ஆச்சரியமூட்டும் தகவல்கள்

நரேந்திர மோதி அரசுக்கு வலுவில்லையா? சீன நாளிதழ் ஆய்வு வெளியிடும் தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக கருதப்படும் “குளோபல் டைம்ஸ்” நடத்திய பொதுமக்கள் ஆய்வில் இந்தியா, சீனா இடையிலான உறவுகள், இரு தரப்பு பதற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கு மக்கள் அளித்துள்ள கருத்துகள் அடிப்படையில் ஆய்வு விவரம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீனாவின் 10 பெருநகரங்களில் சுமார் 2,000 பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளதாக அந்த நாளிதழ் கூறுகிறது.

இந்தியாவின் செல்வாக்கு, சமீபத்திய எல்லை பதற்றங்கள், உள்நாட்டில் புறக்கணிக்கப்படும் சீன பொருட்கள், இரு தரப்பு உறவில் அமெரிக்க தலையீடு போன்ற கேள்விகளின் ஆய்வுத்தரவுகளை அந்த நாளிதழ் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

இலங்கை போரில் மக்களை கொன்றதா ராணுவம்? எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு

கெஹெலிய ரம்புக்வெல

பட மூலாதாரம், KELIYA RAMBUKEWLLA / FACEBOOK

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, பயங்கரவாதிகள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை இராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியதில் பொதுமக்கள் உயிரிழந்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெம் தெரிவித்திருந்தார்.

சுஷாந்த் சிங் மரணம்: சிபிஐ விசாரணைக்கு முன்பாக மனம் திறக்கும் ரியா சக்ரபர்த்தி – காரணம் என்ன?

ரியா

பட மூலாதாரம், Getty Images

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையை இந்திய புலனாய்வுத்துறை விசாரித்து வரும் நிலையில், அவருடன் கொண்டிருந்த உறவு, அவரது பணத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகையும் சுஷாந்தின் முன்னாள் தோழியுமான ரியா சக்ரபர்த்தி.

சுஷாந்தின் மரணம் தொடர்பான தகவல் வெளிவரத் தொடங்கியதில் இருந்தே ரியா சக்ரபர்த்திக்கு அதில் தொடர்பு இருப்பதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் குற்றம்சாட்டி வந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »