Press "Enter" to skip to content

சீனாவில் ஒரு மொழிப்போராட்டம்: “தாய்மொழிக்காக உயிர்கொடுப்போம்” – கிளர்ந்தெழும் மங்கோலியர்கள்

பட மூலாதாரம், AFP

வடக்கு சீனாவில் வசிக்கும் மங்கோலிய இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் கல்விக் கூடங்களில் தங்களது தாய்மொழியான மங்கோலியன் மொழியில் பாடம் கற்பிக்கப்படுவதை விடுத்து சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சீனாவில் இதுபோன்றதொரு மொழிப்போராட்டம் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சீனாவில் இன்று (செப்டம்பர் 1) முதல் புதிய கல்வியாண்டு துவங்குகிறது. எனினும், பள்ளிகளில் சீன மொழிக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு வழிவகை செய்யும் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் விதமாக நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை.

சீனாவின் தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்றான உள் மங்கோலியாவிலுள்ள கல்விக் கூடங்களில் மூன்று பிரதான பாடங்களும் சீனாவின் அலுவல் மொழியான மாண்டரினில் கற்பிக்கப்படும் என்று அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கையை பல மங்கோலியர்கள் தங்கள் கலாசார அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக கருதுகின்றனர்.

இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கடந்த வாரயிறுதியில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது பல்வேறு நகரங்களுக்கு பரவியுள்ளது. இதில் திரளான எண்ணிக்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபெற்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

“எங்கள் மொழி மங்கோலியன், எப்போதும் மங்கோலியாதான் எங்கள் தாயகம்! எங்கள் தாய்மொழி மங்கோலியன், நாங்கள் எங்கள் தாய்மொழிக்காக உயிர்கொடுப்போம்!” என்று அண்மையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கூச்சலிட்டதாக, அமெரிக்க அரசின் ஆதரவுடன் செயல்படும் ஒளிபரப்பாளரான ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிரான மனுக்களில் பெண்கள் தங்கள் கைரேகைகளைப் பதிவது, கையொப்பமிடுவதை போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டன.

பதற்றமான சூழ்நிலை

புதிய கல்விக் கொள்கையின்படி, இந்த மாதத்திலிருந்து, பள்ளிகளில் படிப்படியாக அரசியல், வரலாறு, மொழி மற்றும் இலக்கியம் ஆகிய மூன்று பாடங்களும் வழக்கமாக கற்பிக்கப்படும் மங்கோலியன் மொழியை விடுத்து, மாண்டரின் மொழியில் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் தன்னாட்சி பகுதியான உள் மங்கோலியாதான் அந்த நாட்டில் சிறுபான்மையினரான உள்ள மங்கோலியர்களின் தாயகமாக உள்ளது.

இந்த கொள்கை மாற்றம் பற்றிய தகவல்கள் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டபோதே பல பெற்றோர்களுக்கு தெரியவந்ததாகவும், இதனால் அந்த பிராந்தியம் முழுவதுமுள்ள பள்ளிகளின் முன்பு பெற்றோர்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தெற்கு மங்கோலிய மனித உரிமைகள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

1 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:03 IST

முன்னதாக அங்குள்ள உண்டு உறைவிட பள்ளியொன்றில் தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்பிய நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் இந்த கொள்கை மாற்றம் குறித்து தெரிந்ததும் மீண்டும் பள்ளிகளுக்கு சென்று தங்களது குழந்தைகளை வெளியே அனுப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நூற்றுக்கணக்கான வன்முறை தடுப்பு பிரிவு காவல்படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மேலும், பள்ளியில் மாணவர்கள் தங்கியுள்ள இடத்திற்குள் பெற்றோர்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல மணிநேரங்கள் பள்ளிகளுக்கு வெளியே நின்றிருந்த பெற்றோர்கள் ஒருகட்டத்தில் காவல்துறையினரின் தடுப்பை உடைத்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லத் தொடங்கினர்” என்று தெற்கு மங்கோலிய மனித உரிமைகள் தகவல் மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »