Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊரடங்கு தளர்வு: பேருந்து, தொடர் வண்டிமற்றும் மெட்ரோ தொடர் வண்டியில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?

  • ரிச்சர்ட் ஃபிஷர்
  • பிபிசி

பட மூலாதாரம், Getty Images

வழக்கமான முன்னெச்சரிக்கைகளுடன், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போது கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்தை எப்படி நாம் குறைத்துக் கொள்ள முடியும்?

பிரிட்டன் பின்னணியில் வந்துள்ள இக்கட்டுரை உங்களுக்கு உதவலாம்.

லண்டனில் சுரங்க ரயில் நிலையத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாறுவதற்குப் புத்திசாலி பயணிகள் மறைமுக உத்திகளைக் கையாளுகின்றனர். உதாரணமாக, நடைமேடைகளில் நடந்து செல்லும்போது, வழிகாட்டிப் பலகைகள் இல்லாத வழிகள் குறுக்கு வழிகளாக இருக்கும்.

ஏதும் பெட்டிகள் கொண்டு சென்றால், அவற்றை ஒப்படைத்துவிட்டால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, நடைமேடை முடியும் இடத்தில் சரியாக வந்து சேர்ந்துவிடும். எனவே கூட்டத்தில் இருந்து விலகி நீங்கள் வேகமாக முன்னேறிச் செல்ல முடியும்.

இருந்தபோதிலும், நோய்த் தொற்று காலத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள நுட்பங்களை மிகவும் அனுபவம் வாய்ந்த பயணிகள் கூட முன்பு கையாண்டது கிடையாது.

சீக்கிரமாக செல்வது என்பதைக் காட்டிலும், பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்பது தான் முக்கியமானதாக உள்ளது.

நோய்த் தொற்று காலத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பேருந்துகளில் பாதி அளவுக்குதான் பயணிகள் சென்றனர். சுரங்க ரயிலில் மூன்றில் ஒரு பகுதி பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆனால் பல நாடுகளில் முடக்கநிலை நீக்கப்பட்டு, அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் ரயில்கள், பேருந்துகள் மற்றும் சுரங்க ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கோவிட்-19: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாகப் பயணிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ஆகவே, கவனமாக இருக்கக் கூடிய ஒரு பயணி எப்படி ஆபத்தைக் குறைத்துக் கொள்ள முடியும்?

அவசியமாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன – முக கவச உறை அணிதல், முடிந்த வரையில் நெரிசல் நேர பயணத்தைத் தவிர்ப்பது, வாகனம் ஏறும் இடங்களிலும், பயணத்தின் போதும் தனிநபர் இடைவெளியைப் பராமரித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

பொது சுகாதாரத் துறையினரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டியது முக்கியம். அது உங்களுக்கான ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கும். ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறிய விஷயங்களும் இருக்கின்றன. போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பயணிகள் மன ஓட்டம் பற்றிய தகவல்கள் சில குறிப்புகளை அளிக்கின்றன. வரக் கூடிய மாதங்களில் எப்படி மாறிக் கொள்ள வேண்டும் என்பதை அவை தெரிவிக்கின்றன.

காற்றோட்டமும், காற்று சுழற்சியும் முக்கியம்

கோவிட்-19 போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட பகுதிக்குள் மக்கள் நிறைய சுவாசிக்கிறார்கள், இருமுகிறார்கள், பேசுகிறார்கள். அதே காற்றில் அவை கலப்பதால், இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வேலை செய்யும் இடத்துக்கு நடந்தோ, சைக்கிளிலோ அல்லது ஸ்கூட்டரிலோ செல்ல முடியும் என்றால், மற்றவர்களிடம் இருந்து நீங்கள் இடைவெளியைக் கடைபிடிக்க முடியும். அது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

தனிப்பட்ட முறையில் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை. உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் மட்டும் பயணிப்பது என்ற அளவுடன் இருக்கும் வரையில் அது பாதுகாப்பானது. ஆனால் பலரும் காரை பயன்படுத்துவார்கள் என்றால், அதிக போக்குவரத்தில் “பொதுவான துயரங்கள்” தாக்கம் இருக்கும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம் ஏற்படும். சமூகப் பொறுப்பு தேர்வை நீங்கள் செய்வதாக அது இருக்காது. “நகரக் கட்டமைப்பில் கார்களைப் பயன்படுத்துவது மிகவும் செயல் திறனற்றது. நாம் அனைவரும் ஒரு காரில் பயணித்தால், யாரும் நகர்வதில்லை” என்று மசாசுசெட்ஸ், கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஐ.ஜி. சென்சியபிள் சிட்டி லேப் இயக்குநர் கார்லோ ராட்டி கூறுகிறார்.

கோவிட்-19: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாகப் பயணிப்பது எப்படி?

பட மூலாதாரம், Reuters

ரயில், பேருந்து மற்றும் சுரங்க ரயிலில் பயணிப்பதாக இருந்தால், உங்களுக்கு நல்ல காற்றோட்டம் உள்ள வகையிலான வழித்தடத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் போக்குவரத்து ஆராய்ச்சியாளர் நிக் டைலர் கூறுகிறார். பேருந்துகளில் வைரஸ் எப்படி பரவுகிறது என்பது குறித்து இவர் ஒரு மாடலை தயாரித்துள்ளார்.

“வெளியில், காற்றுவெளியில், திவலைகள் காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும். நாம் அந்தப் பகுதிக்குள் சென்றதும் நகர்தலுக்கு குறைவான இடமே இருக்கும்” என்று அவர் விவரிக்கிறார்.

வடிவமைப்புகள் மாறுபடும். ஆனால் அதிக ஜன்னல்கள் இருப்பது நல்லது. இதற்காக, ரயில் மற்றும் பேருந்தைக் காட்டிலும், ஆழத்தில் செல்லும் சுரங்க ரயிலில் காற்றோட்ட வசதி கிடைப்பது கஷ்டமானது. லண்டன் சுரங்க ரயிலை வழக்கமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் ப்ளூ-போன்ற அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த லாரா கோஸ்சே 2018ல் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே, விமானங்களைக் காட்டிலும் பொதுப் போக்குவரத்துகளில் காற்றோட்ட வசதி குறைவாகவே இருக்கும். விமானங்களில் சில நிமிடங்களுக்கு ஒரு முறை அதிநவீன தொழில்நுட்பம் மூலம் காற்று மறுசுழற்சி செய்யப்படுகிறது. அப்போது பெரும்பாலான வைரஸ்கள் வெளியில் தள்ளப்படும்.

“விமானங்களில் காற்றோட்டம் பல வகைகளில் மிக மோசமானது போல தோன்றும். உண்மையில் மிகச் சிறந்த காற்றோட்ட வசதி அதில் தான் உள்ளது” என்கிறார் டைலர். மேலும் ரயில்கள் மற்றும் பேருந்துகளைப் போல அல்லால் காற்று நேரடியாக மேற்கூரையில் இருந்து தரைப்பகுதியை நோக்கிப் பாய்கிறது. அதாவது திவலைகள் தரைக்கு தள்ளப்படும். கைகள் மற்றும் முகத்தில் படாமல் வேகமாக அவை நீக்கப்படும்.

இதற்கு மாறாக, நியூயார்க் சுரங்க ரயிலில் காற்று கிடைமட்டமான திசையில் பரவும். காற்றை வடிகட்ட அளவிடும் புள்ளியில் 20 குறியீட்டில் 7 குறியீடு மட்டுமே கொண்ட வடிகட்டிகள் மட்டுமே அவற்றில் பயன்படுத்தப் படுகின்றன.

அமைதியே சிறந்தது

பயணத்துக்கான வாகனத்தை நீங்கள் தேர்வு செய்த பிறகு, உள்ளே எந்த அளவுக்குப் பேசப் போகிறோம், எவ்வளவு சப்தமாகப் பேசப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

கோவிட்-19: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாகப் பயணிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அமைதியாக இருக்கும் இடத்தைவிட, சப்தங்கள் நிறைந்த, தாங்கள் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக உங்கள் பக்கமாக சாய்ந்து பேசுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இரவுநேர கிளப்கள், பார்கள் அல்லது இறைச்சி பாக்கெட் செய்யும் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

எனவே, சப்தங்கள் நிறைந்த ரயில் பெட்டியில் விளையாட்டு ரசிகர்கள் பாடிக் கொண்டு பயணிக்கும் சூழலில் இருப்பதைக் காட்டிலும், தங்கள் செல்போன்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பவர்கள் உள்ள வாகனத்தில் செல்வது நல்லது.

ஒப்பீட்டளவில் ஆபத்துகளை காட்டுவதாக, பி.எம்.ஜே. ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட இந்த விளக்கப்படம் காட்டுகிறது.

இருக்கையை எங்கே தேர்வு செய்வது?

“காலியாக இருக்கும் சுரங்க ரயில் பெட்டியில் ஒருபோதும் ஏற வேண்டாம்” என்பது நியூயார்க்கில் வழக்கமாகக் கூறப்படும் வார்த்தைகளாக இருக்கும். கெட்ட வாடை போன்ற காரணங்களால் மற்றவர்கள் தேர்வு செய்யாத பெட்டியாக அது இருக்கலாம். நீங்கள் தாக்கப்படும் ஆபத்து இருக்கலாம் என்பது அதன் அர்த்தம்.

கோவிட்-19: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாகப் பயணிப்பது எப்படி?

பட மூலாதாரம், Reuters

உதாரணமாக, இப்போதும் இரவு நேரத்தில் பயணம் செல்லும் பெண்களுக்கு இது நல்ல யோசனையாகவே உள்ளது. ஆனால், நோய்த் தொற்று காலத்தில், முடிந்த வரையில் பயணிகள் நெரிசலில் இருந்து விலகி இருப்பது நல்லது.

முக கவச உறை அணிவதை ஊக்குவிப்பதுடன், தாங்கள் தேர்வு செய்யும் இருக்கை சமூக இடைவெளியை பின்பற்றியதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தக் கூடிய அறிவிப்புப் பலகைகளை பல போக்குவரத்து நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.

ஆனால் எந்த இருக்கையைத் தேர்வு செய்வது அல்லது தவிர்ப்பது என்பதில் பல விஷயங்கள் உள்ளன.

ரயில்களில் நோய்த் தொற்று பரவலின் தன்மையை இருக்கைகளின் நெருக்கம் எப்படி பாதிக்கிறது என்பது குறித்து சமீபத்தில் சீனாவில் ஓர் ஆய்வு நடந்தது. சீனாவில் அதிவேக ரயில்களில் வைரஸ் தாக்கத்துடன் உள்ள 2,000க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்த இருக்கைகள் குறித்து டிசம்பர் 2019 மற்றும் மார்ச் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் ஆய்வு செய்யப்பட்டது. நபர்களுக்கு இடையில் எப்படி வைரஸ் நகர்கிறது என்பதை அவர்களால் கண்டறிய முடிந்தது.

ஒரே வரிசையில், அடுத்தடுத்து அமர்வது அதிகபட்ச ஆபத்தை உருவாக்குவதாக இருந்தது. ஆனால் சீனாவின் அதிவேக இன்டர்சிட்டி ரயிலில் முன் பின் இருக்கைகளில் அமரும்போது, முதுகு சாயும் பகுதி ஒட்டியிருப்பது போல அமரும்போது, பாதிப்பு குறைவாக இருந்தது. இன்டர்சிட்டி ரயில்களில் ஒரே வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் கழிவறை செல்லவோ அல்லது ஏதாவது சாப்பிடவோ விரும்பும் போது ஒருவரை ஒருவர் கடந்து செல்ல வேண்டியுள்ளது. (ஏற்கெனவே நெருக்கமான தொடர்பில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அருகருகில் அமர்ந்திருக்கும் போது, நோய் பரவல் ஏற்படும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் மறுக்கவில்லை.)

இரண்டு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்தாலும், நீண்ட தூர பயணங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இரண்டு மணி நேரம் கழித்து, 2.5 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில், முகக்கவச உறை அணியாமல் இருந்தால், நோய் பரவலைத் தடுக்க உதவாது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர் ஏற்கெனவே அமர்ந்திருந்த இடத்தில் நாம் அமர்ந்தால், வைரஸ் பாதிப்புக்கு அதிக ஆபத்து ஏற்படுவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எங்கே நிற்பது?

நியூயார்க் சிட்டியில் சுரங்க ரயில் பயணிகள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. நின்று கொண்டு பயணம் செய்பவர்கள் கைப் பிடிகளை, ஸ்டிராப்களை, தண்ணீர் திறப்பதற்கான குமிழ்களை அதிக அளவில் தொடுவதாக அதில் தெரிய வந்தது. நிறைய பேர் தொடக் கூடிய இடங்களை நாம் தொடக் கூடாது என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது. நாம் பேசும்போது, சுவாசிக்கும் போது, இருமும்போது வெளியாகும் திவலைகள் மூலமாகத்தான் வைரஸ் பிரதானமாகப் பரவுகிறது என்று கருதப்பட்டாலும், வைரஸ் தொற்று உள்ள மேற்பரப்புகளைத் தொட்டுவிட்டு, விரல்களை நமது வாய் அல்லது மூக்கின் அருகே கொண்டு செல்லும் போதும் வைரஸ் பரவும்.

நியூயார்க் பயணிகளில் நின்று கொண்டு பயணிப்பவர்கள், பெட்டியில் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் கதவுகளை ஒட்டிய பகுதிகளில் அதிகம் நிற்கிறார்கள் என்றும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெளியேறுவதற்கு எளிதான வசதி, சாய்ந்து கொள்ள வசதி மற்றும் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம் என்பதற்காக இப்படி தேர்வு செய்கிறார்கள். எனவே கதவு அருகே நின்று கொள்வது கலப்புநிலை பயன்களைத் தருகிறது. அது அதிக காற்றோட்டமான பகுதியாக இருக்கலாம், ஆனால் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகவும் இருக்கும்.

ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாக நிற்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. அநேகமாக இது பழங்காலத்தைய சமூகப் பார்வையாக இருக்கலாம் அல்லது ஆண்கள் நிற்பதை விரும்புவதாக இருக்கலாம். பெண்களைக் காட்டிலும் ஆண்கள் குறைவாகவே கைகளைக் கழுவுகிறார்கள் என்ற ஆய்வுகளை கருத்தில் கொண்டு பார்த்தால், ஆண் நிற்கும் இடத்தில் உள்ள கம்பியைத் தொடாமல் இருப்பது நல்லது. அவருடைய அழுக்கான கைகள் அதைத் தொட்டிருக்கும்.

தெரியாத விஷயங்கள் காத்திருக்கின்றன

பொதுப் போக்குவரத்தில் வழக்கமாகப் பயணம் செய்வது தனிநபர்களுக்கான ஆபத்தை உள்ளடக்கியதாக இருக்கும் நிலையில், எந்த அளவுக்கு அந்த ஆபத்து இருக்கும் என்பது இப்போதைக்குத் தெளிவாகத் தெரியவில்லை. பொதுப் போக்குவரத்து வசதிகளுக்கும், நோய்த் தொற்றுக்கும் எந்தத் தொடர்பும் காணப்படவில்லை என்று கிறிஸ்ட்டினா கோல்டுபாம் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு செய்தியளித்துள்ளார். ஜப்பானில், பிரான்ஸ், ஆஸ்திரேலியாவில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாகப் பயணிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பரபரப்பான, நெரிசலான பார்கள் போன்ற உள்ளரங்க சூழல்களைக் காட்டிலும், பொதுவான முகக்கவச உறை அணிந்து, காற்றோட்ட வசதியுள்ள பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது குறைவான ஆபத்தையே உருவாக்கும் என்று சில கணிப்புகள் கூறுகின்றன. குறைந்த நேரத்தில் அடுத்த ரயிலைப் பிடிப்பது, காற்றோட்டம், மற்ற பயணிகளுடன் குறைவாகப் பேசுதல் (அதாவது குறைவான திவலைகள் வெளிப்பாடு) ஆகியவையும் உதவ வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

நோய்த் தொற்றுக்கு முந்தைய காலத்துக்குத் திரும்பிச் செல்வது சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் குறுகிய எதிர்காலத்திற்குள் அந்த வாய்ப்பு கிடையாது.

உதாரணமாக, லண்டன் பேருந்துகளில் 30 சதவீதம் பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. எனவே எல்லா அலுவலர்களுமே பணிக்குத் திரும்புவதாக இருந்தால், சமூக இடைவெளியை பராமரிக்க 2 – 3 மடங்கு அளவுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும்.

இதனால் மக்களுக்குத் தாமதம் ஏற்படும். அப்படியே அலுவலக இடத்தை அடைந்தாலும், வானுயர்ந்த கட்டடத்தின் லிப்ட்களில சமூக இடைவெளியைப் பின்பற்றி மேலே செல்வதற்கு காத்திருக்க வேண்டும் என்கிறார் டைலர்.

பயணம் குறித்து மறு ஆலோசனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. “மாறுதல்கள் நடக்கும் காலத்தில் நகரங்களில் பரிசோதனைகளை முயற்சிப்பது முக்கியமானது” என்கிறார் ராட்டி. “ஒரு விஷயத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் திறன், நகரில் நிலைமாற்றத்தை அது ஏற்படுத்துமா என கண்டறிவது ஆகியவை கோவிட்-19க்குப் பிந்தைய காலத்தில் நமக்குத் தேவையான அம்சங்களாக இருக்கும்.”

எனவே, பொதுப் போக்குவரத்துப் பயணத்தில் ஆபத்து வாய்ப்பைக் குறைத்துக் கொள்ள குறுகிய கால வழிமுறைகள் இருந்தாலும், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எப்படி, எப்போது செல்லப் போகிறோம் என்பதை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டுமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்வது எப்படி இருக்கும். எண்ணிக்கை அடிப்படையில் இருக்குமா அல்லது வேகத்தின் அடிப்படையில் இருக்குமா? இப்போதைக்கு, அந்தக் கேள்விக்குப் பதில் தெரியாது. பயணிகள் என்ற முறையில் சிலவற்றை நாம் உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

9 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:10 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »