Press "Enter" to skip to content

சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் இரானுக்கு முக்கியத்துவம் தரும் மோதி அரசு – விரிவான தகவல்கள்

  • ரஜ்னீஷ் குமார்
  • பிபிசி

பட மூலாதாரம், Getty Images

இரான் என்றால் ஆரிய நிலம். இந்தியாவுக்கு ஆரியவர்த்தா என்ற பெயரும் உண்டு. இரான் ஒரு இஸ்லாமிய நாடாக மாறுவதற்கு முன்பு ஒரு பார்ஸி (பாரசீகம்) நாடாக இருந்தது. ஆனால் இப்போது, ஒரு சில பார்ஸிகள் மட்டுமே அங்கு எஞ்சியுள்ளனர். இஸ்லாமிய எழுச்சியுடன், ஜொராஷ்ட்ரியர்கள் இரானில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் பார்ஸிகளில் பெரும்பாலோர் இந்தியாவின் குஜராத் மாநிலத்துக்கு வந்தார்கள் அல்லது மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றார்கள். இரானில் பார்ஸிகள் இருந்தபோது, இந்தியாவுடன் ஒரு கலாசார தொடர்பு இருந்தது. இஸ்லாமிய நாடு உருவானபோதும், அந்த உறவுகள் ​​ஆழமாக இருந்தன.

இரான் ஒரு ஷியா இஸ்லாமிய நாடு. இரானுக்கு அடுத்தபடியாக ஷியா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடு இந்தியாதான். இந்தியா பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் உருவாகியிருக்காது. அப்போது இரானுடன் இந்தியா தனது எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும். பாகிஸ்தானும் இரானும் அண்டை நாடுகளே என்றாலும்கூட இரண்டிற்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக இல்லை.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

11 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:58 IST

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்கிழமை இரானுக்கு பயணம் மேற்கொண்டு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீஃபை சந்தித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சருடன் பல விஷயங்கள் குறித்து சாதகமான சூழலில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக இரானிய வெளியுறவு அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக செப்டம்பர் 6 ஆம் தேதி, இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரான் சென்றிருந்தார். அவர் இரானின் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹதாமியை சந்தித்தார்.

மோதி அரசின் இரண்டு கேபினட் அமைச்சர்கள், நான்கு நாட்களுக்குள் இரான் சென்றிருப்பதன் பொருள் என்ன?

ரே வாரத்தில் இரான் சென்ற 2 அமைச்சர்கள்

இரான்

பட மூலாதாரம், Getty Images

மோதி அரசின் இரண்டு கேபினட் அமைச்சர்கள் நான்கு நாட்களுக்குள் இரான் சென்றிருப்பதை இரண்டு வழிகளில் பார்க்கலாம் என்று பல நாடுகளில் இந்தியாவின் தூதராக இருந்த ராகேஷ் சூட் கூறுகிறார்.

“ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் இருந்து திரும்பி வரும் வழியில் டெஹ்ரானுக்கு சென்றார், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மாஸ்கோ செல்வதற்கு முன்பு, அங்கு சென்றார். இருவரும் விமானப்படை விமானத்தில் சென்றனர்.

ஆகவே, புதுடெல்லியில் இருந்து மாஸ்கோ அல்லது மாஸ்கோவிலிருந்து புதுடெல்லிக்கு நேரடியாக வர இயலாது. நடுவில் எங்காவது தங்க வேண்டியிருந்த நிலையில், இருவருமே டெஹரானைத் தேர்ந்தெடுத்தனர்.

இருவரும் டெஹ்ரானுக்கு பதிலாக துபையை கூட தேர்வு செய்திருக்கலாம், ஆனால் டெஹ்ரானைத் தேர்ந்தெடுத்தது, வழியில் தங்குவதற்காக மட்டுமே அல்ல, இன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு இரான் பல வகைகளில் மிக முக்கியமானது. ” என்று ராகேஷ் சூட் தெரிவிக்கிறார்.

“இரான், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், துருக்கி ஆகியவை மத்திய கிழக்கில் ஒன்றிணைந்து வருவதை பார்க்க முடிகிறது.

இரான் மற்றும் பாகிஸ்தானில், பல பெரிய திட்டங்களில் சீனா ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக மத்திய கிழக்கில் ரஷ்யாவும் ஒரு முக்கிய சக்தியாக உள்ளது . மத்திய கிழக்கில் ரஷ்யா மற்றும் சீனாவின் சிந்தனையும் வேறுபட்டதல்ல. பாகிஸ்தான், துருக்கி, இரான் ஆகிய நாடுகளும் இதே அலைவரிசையில் உள்ளன.

மறுபுறம், இரானிடம் இருந்து இந்தியாவுக்கு சாதகமான செய்தி கிடைக்கவில்லை. இரானில் சபஹார் திட்டத்தை இந்தியாவால் இன்னும் செயல்படுத்த முடியவில்லை.

இது தவிர, அமெரிக்காவுக்கு நெருக்கமான மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக உள்ளது. உதாரணமாக, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை கூறலாம் , ” என்கிறார் ராகேஷ் சூட்.

இரான்

பட மூலாதாரம், Getty Images

ஆகஸ்ட் 26 ஆம் தேதி செளத் ஏஷியா டெமாக்ரஸி வாட்ச் ( தெற்காசிய ஜனநாயக கண்காணிப்பு அமைப்பு) ஏற்பாடு செய்த அஸ்மா ஜஹாங்கிர் நினைவு சொற்பொழிவில், பாகிஸ்தானின் பிரபல பாதுகாப்பு நிபுணர் ஆயிஷா சித்திகி, உலகம் மாறி வருவதாகவும், பழைய முறைகளுடன் கூடவே பழைய கூட்டணிகளும் முறிந்து வருவதாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பயங்கரமான முறையில் மாறிவிட்டது, அது இந்தியா மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அஸ்மா கூறினார்.

“அமெரிக்கா-தாலிபான் இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் கூட முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்க இருந்த அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 2001இல் செப்டம்பர் 11 தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான், அமெரிக்க கூட்டணியுடன் இணைந்தது.

இருப்பினும், நிதி உதவிக்காக பாகிஸ்தான் வேறு வழியில்லாமல் இதில் சேர்ந்துள்ளது என்று சிலர் கருதுகின்றனர். ஒசாமா பின் லேடனை தங்க வைத்திருந்தது, தாலிபான்களை ஆதரிப்பது ஆகிய விஷயங்கள் தொடர்பாக மெளனமாக இருப்பதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி எதுவும் இல்லை.

இப்போது சீனாதான் பாகிஸ்தானுக்கு ஒரே கதி. நெருக்கடி நேரத்தில் சீனாவைத் தவிர வேறு யாரையும் பாகிஸ்தான் எதிர்பார்க்க முடியாது. உலக அரசியலின் மாறி வரும் புதிய சமன்பாட்டில் அமெரிக்கா, செளதி அரேபியா, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.

அத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் இப்போது சீனா, ரஷ்யா மற்றும் இரானுக்கு நெருக்கமாகச்செல்வதை காண முடிகிறது,” என்று ஆயிஷா சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானின் எதிர்காலம் சீனாவுடன்தான் உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கூறியிருப்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கில் உருவாகும் புதிய சமன்பாடுகள்

இரான்

பட மூலாதாரம், Twitter/ Dr. S. Jaishankar

“சீனாவின் லட்சிய திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் ‘(பிஆர்ஐ) இரான், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் மேற்கொண்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இத்தகைய சூழ்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கும் இரானுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஒரு காலத்தில் இரான், பாகிஸ்தான் ஆகிய இரண்டுமே அமெரிக்க நட்பு நாடுகளாக இருந்தன. பாகிஸ்தானும் இரானும், பிஆர்ஐ மூலம் பயனடைய முடியுமா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. இதற்கான பதிலை நாம் காத்திருந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

பாகிஸ்தானில், ஷியா, சுன்னி ஆகிய பிரிவினர் இடையிலான சண்டை நடந்து கொண்டேதான் இருக்கிறது. மறுபுறம், இரான் மற்றும் பாகிஸ்தானின் நட்பை செளதி அரேபியா விரும்பாது. இரானுக்கும் செளதிக்கும் இடையே பாகிஸ்தான் எவ்வாறு சமநிலையை பராமரிக்கும்? “என்று ஆயிஷா சித்திகி இந்த நினைவு சொற்பொழிவில் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவுக்கு, சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் எப்போதுமே இணக்கமான நட்புறவு இருந்ததில்லை. ஆனால் ரஷ்யா இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது. இரானுடனும் நல்ல உறவு நிலவுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், இரான் மற்றும் ரஷ்யாவுடனான உறவை மோசமடைய விடக்கூடாது என்ற இந்தியாவின் கவலை நியாயமானதே. இப்போது, ​​கிழக்கு லடாக்கின் எல்லையில், இந்தியா மற்றும் சீனாவின் ராணுவம் நேருக்கு நேர் உள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கு வகை செய்யும் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்கியதும் இந்த சர்ச்சைக்கு ஒரு காரணம். இந்தியாவின் இந்த நடவடிக்கையை சீனா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் இரான் கூட வெளிப்படையாக எதிர்த்தன. ஆனால், ரஷ்யா இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை.

ஆனால் கவலை தரக்கூடிய விஷயம் என்னெவென்றால், ரஷ்யாவுடன் பாகிஸ்தானை நெருக்கமாக்குவதில் சீனா வெற்றியடைந்தால், அது இந்தியாவுக்கு பெரிய அடியாக இருக்கும்.

ஒருபுறம், இரான் மற்றும் சீனாவின் நெருக்கம் அதிகரித்து வருகிறது, மறுபுறம், இரானில் இந்தியா செயல்படுத்த விரும்பிய சபஹார் திட்டம் , தேக்க நிலையில் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில், இரான், துருக்கி ஆகியவை காஷ்மீர் பிரச்னையில் பகிரங்கமாக கருத்து தெரிவித்தன. சீனாவுடனான பதற்றத்தின் மத்தியில், எந்த நாடுகளுடன் இந்தியா சேரும் என்பது மிகவும் முக்கியமாகிவிட்டது.

மத்திய கிழக்கில் சீனாவுடன் போட்டியிடுவது இந்தியாவுக்கு மெல்ல மெல்ல கடினமாகி வருகிறது. 2005 மற்றும் 2019 க்கு இடையில், சீனா 55 பில்லியன் டாலர்களை மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் முதலீடு செய்தது என்று AEI சைனா குளோபல் இன்வெஸ்ட்மென்ட் டிராக்கர் கூறுகிறது.

2004-2014 க்கு இடையில், சீனா இந்த பகுதிகளுக்கு 42.8 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்கியது என்று ஏய்ட் டேட்டா ரிசர்ச் லேப் ( நிதியுதவி தரவு ஆராய்ச்சி ஆய்வகம்) தெரிவிக்கிறது. அதைச் சுற்றியுள்ள பல நாடுகளில் சீனா மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.

ரானின் அதிகரித்து வரும் செல்வாக்கு

இரான்

பட மூலாதாரம், Getty Images

மத்திய கிழக்கில் இரான் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் இந்தியாவின் செல்வாக்கு அங்கு படிப்படியாக குறைந்து வருகிறது. கூடவே, சீனாவுக்கு ஆதரவாக விஷயங்கள் வலுவாக முன்னேறி வருகின்றன. சீனாவுக்கும் இரானுக்கும் இடையிலான விரிவான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு ஒப்பந்தத்தின் அறிக்கை கசிந்த சில நாட்களுக்குப் பிறகு, இரான் தானாகவே சபஹார் திட்டத்திற்கான ரயில் இணைப்பை முன்னெடுத்துச் செல்ல தொடங்கியது.

முன்னதாக இந்தியாவும் இதில் இணைந்திருந்தது. இந்த ரயில் பாதையை இரானின் சபஹாரில் இருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெரஞ்ச் பிராந்தியம் வரை கொண்டு செல்ல திட்டம் உள்ளது. இரான் சீனாவுடன் எந்தத்திட்டம் குறித்து பேச்சு நடத்துகிறதோ, அது 400 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானது என்று இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

“இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையிலான உறவை, நடப்பு உலகளாவிய காரணங்களால் அல்லது அரசியல் பொருளாதார கூட்டணிகளால் உடைக்க முடியாது. இரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விஷயத்தில், இந்தியா ஒரு தனிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது,

ஆனால் எங்கள் நண்பர்கள் நெருக்குதலுக்கு அடிபணிய மாட்டார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நெருக்குதலை சமாளிக்கும் திறன் அனைவருக்கும் இருக்கவேண்டும். அமெரிக்கா மிரட்டி நெருக்குதல் அளிப்பதால், இரானிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குதில்லை. நீங்கள் எங்களிடமிருந்து எண்ணெய் வாங்கவில்லை என்றால், நாங்கள் உங்களிடமிருந்து அரிசி வாங்க மாட்டோம்,” என்று இந்திய பெண் பத்திரிகையாளர்கள் சங்க செய்தியாளர் சந்திப்பின்போது, இரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீஃப், கடந்த ஆண்டு நவம்பரில் கூறினார்.

இந்தியா, சதாம் உசேன் தலைமையிலான இராக்குடன் அதிக நெருக்கமாக இருப்பதாக இரான் நினைத்தது. இராக் உடனான இந்தியாவின் உறவு நன்றாகவே இருந்தது என்பது உண்மைதான். நீண்ட காலமாக இராக், இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வழங்கும் நாடாக இருந்தது. வளைகுடா ஒத்துழைப்பு சபையுடனான பொருளாதார உறவுகள் மற்றும் இந்திய தொழிலாளர்கள் தொடர்பான மேலாண்மை திறமைகள் காரணமாக அரபு நாடுகளுடன் இந்தியாவின் வலுவான உறவுகள் நிறுவப்பட்டன.

இரானில் இருந்து எண்ணெய் வழங்கல் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப ஒருபோதும் இருந்ததில்லை. இதற்கு முக்கிய காரணங்கள், இஸ்லாமிய புரட்சி; இராக்-இரான் மோதல் மற்றும் அமெரிக்கா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தவிர, இந்தியாவும் நீண்ட காலமாகவே, இரானுடனான நட்பை மேலும் அதிக உயரத்திற்கு கொண்டுசெல்ல தயங்கிவந்தது.

1991 ல் பனிப்போர் முடிவடைந்த பின்னர், சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, ​​உலகம் ஒரு புதிய திருப்பத்தை எதிர்கொண்டது.

இந்தியா அமெரிக்காவுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டபோது, அந்த நாடு இரானுடன் இந்தியா நெருங்கி வருவதை எப்போதுமே தடுத்தது.

இராக் உடனான போருக்குப் பிறகு, இரான் தனது ராணுவத்தை பலப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தது. அப்போது முதல் இரான் அணுகுண்டுகளை உருவாக்க விரும்பியது மற்றும் அணுவாற்றல் திட்டங்களைத் தொடங்கியது. இரான் ஒரு அணுசக்தி நாடாக மாறி மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இத்தகைய சூழ்நிலையில், உலகின் பிற நாடுகளுடன் இரானின் உறவு இயல்பாக இருக்கக்கூடாது என்பதால் அமெரிக்கா அதிகமாகவே நெருக்குதல் கொடுத்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »