பட மூலாதாரம், Getty Images
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா பெருந்தொற்றால் ஏழை நாடுகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக பிபிசி கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவல் தொடங்கி ஆறு மாதங்கள் ஆன நிலையில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.
ஊரடங்கால் உலக நாடுகளில் பொருளாதாரம் பாதிப்பட்டதை தொடர்ந்து, மக்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடி ஒரு முக்கிய பிரச்னையாக இருக்கிறது.
ஏழை நாடுகளும், இளைஞர்களும் தாங்கள் கடினமான நேரத்தை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளன.
ஏழை நாடுகளில் மக்கள் வருமானம் 69 சதவீதம் குறைந்திருக்க, பணக்கார நாடுகளில் 45% குறைந்திருப்பது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.


இனம், பாலினத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, ஆண்களைவிட பெண்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவில் வெள்ளையின மக்களை விட, கருப்பின மக்களிடையே அதிகளவில் கொரோனா தொற்று பரவல் காணப்பட்டதும் தெரிய வருகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு பகுதிகளில் எப்படி இருந்தது என்பதை கண்டறிய, பிபிசி உலக சேவைக்காக, குளோப்ஸ்கேன் என்ற நிறுவனம் 27 நாடுகளில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கோவிட்-19 மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்து மொத்தம் 27 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

“கொரோனா பெருந்தொற்று நெருக்கடியில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், உண்மை இதற்கு மாறாக இருப்பது எங்கள் கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில், மற்றும் பெரும்பாலான நாடுகளுக்குள்ளும், அமைப்பு ரீதியாக பின்தங்கியவர்களே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என குளோப்ஸ்கேன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரிஸ் கூல்டர் பிபிசியிடம் தெரிவித்தார்.
சமத்துவமற்ற உலகம்
கொரோனா தொற்றின் தாக்கம் ஏழை நாடுகளில் மோசமாக இருக்க, ஏற்கனவே இருக்கும் சமத்துமின்மையை இது அதிகரித்திருப்பது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான உலக நாடுகளின் கூட்டமைப்பில் (OECD) உள்ள நாடுகளுக்கும், அதில் இல்லாத நாடுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்பட்டன.
உலகின் பொருளாதாரம் வலுவாக இருக்கும் 37 நாடுகளின் கூட்டமைப்புதான் ஓஇசிடி.
ஓஇசிடி கூட்டமைப்பில் இல்லாத நாடுகளில் கொரோனா தொற்றால் 69% மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டதாகவும், இதனுடன் ஒப்பிடுகையில், ஒஇசிடி நாடுகளில் 45 சதவீதத்தினருக்கே வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் மக்களைவிட, லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் 91%, தாய்லாந்தில் 81%, நைஜீரியாவில் 80%, தென் ஆப்பிரிக்காவில் 77%, இந்தோனீசியாவில் 76% மற்றும் வியட்நாமில் 74% பேரும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனிநபர் வருமானம் குறைந்து காணப்படும் நாடுகளில் உள்ள மக்கள், தங்களிடம் வழக்கத்தைவிட மிகவும் குறைந்த பணம் இருப்பதாவே தெரிவிக்கின்றனர்.
தலைமுறை பிளவு
கொரோனா பெருந்தொற்று இளைய தலைமுறைக்கும், முதியோர்களுக்கும் இடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
பெரியவர்களை விட இளம் தலைமுறையினரே கொரோனாவால் கடினமான நாட்களை அதிகம் சந்தித்ததாக தெரிவிக்கின்றனர்.
குறைந்த வேலைவாய்ப்பு, வெளியே செல்ல முடியாமல் இருந்தது மற்றும் கல்வி தடைபட்டது ஆகியவை இதற்கு காரணங்களாக இருக்கலாம்.

1990களுக்கு நடுவில் இருந்து 2010ஆம் ஆண்டுவரை பிறந்தவர்களிடம் (Gen Z) இதுகுறித்து கேட்கப்பட்ட நபர்களில் 55 சதவீதத்தினரும், 1980களில் இருந்து 1990 வரை பிறந்தவர்களில் 56 சதவீதம் பேரும், இந்த கொரோனா பெருந்தொற்றால் தங்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்
காண்பி
முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்
ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்
ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்
கடைசியாக பதிவு செய்யப்பட்டது
11 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:58 IST
இதுவே 1965ல் இருந்து 1980 வரை பிறந்தவர்களில் (Gen X) 49 சதவீதம் பேரும், 1946ல் இருந்து 1964 வரை பிறந்தவர்களில் 39 சதவீதம் பேரும் இத்தொற்றால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக உணருகின்றனர்.
1990களுக்கு நடுவில் இருந்து 2010ஆம் ஆண்டுவரை பிறந்தவர்களில் 63% பேர் தங்கள் வருமான நிலையில் மாற்றம் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆய்வின் மற்ற முக்கிய கண்டுபிடிப்புகள்:
- கொரோனா பெருந்தொற்றால் பத்தில் ஆறு பேர் (57%) பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
- ஆண்களை விட பெண்களே பொருளாதார தாக்கத்தை அதிகம் எதிர்கொள்வதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். ஜெர்மனியில் இதனால் 32% பெண்களும், 24% ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 50% பெண்கள்; 43% ஆண்கள். பிரிட்டனில் 45% பெண்கள்; 38% ஆண்கள்.
- அமெரிக்காவில் கோவிட் 19 தொற்றால் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரோ பாதிக்கப்பட்டதாக 14% கருப்பினத்தவர்கள் கூறுகின்றனர். இதுவே வெள்ளையின அமெரிக்கர்களில் இது 7 சதவீதமாக உள்ளது.
- பெருந்தொற்றின் தாக்கம் பெற்றோர் மீது அதிகம் இருந்துள்ளது. குழந்தைகள் அற்ற நபர்களில் 41 சதவீதம் பேர் இந்த நோய் பரவலின் தாக்கத்தை உணர, குழந்தைகள் இருக்கும் நபர்களில் 57% பேர் அதிக பாதிப்புகளை சந்தித்ததாக கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com