அமெரிக்காவில் காட்டுத்தீ: இரவைப் போல தெரியும் பகல்

அமெரிக்காவில் காட்டுத்தீ: இரவைப் போல தெரியும் பகல்

அமெரிக்காவின் மேற்கு கடலோர மாகாணங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஓரிகன் மாநிலத்தில் மட்டும் டஜன் கணக்கானவர்களை காணவில்லை. மேலும் ‘எந்த ஒரு மோசமான சம்பவத்திற்கும்’ இந்த மாகாணம் தயாராக வேண்டும் என அவசரநிலைப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஓரிகன், கலிஃபோர்னியா மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில், கடந்த மூன்று வாரங்களாக காட்டுத்தீப்பற்றி எரிகிறது. இதனால் பல லட்ச ஏக்கர் நிலங்கள் அழிந்துவிட்டன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman