Press "Enter" to skip to content

‘முஸ்லிம்கள் மீது ஒடுக்குமுறை” – சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை மற்றும் பிற பிபிசி செய்திகள்

சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணிப்பொறி வன்பொருட்கள், ஆடைகள் மற்றும் பிற சரக்குகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாம் என்று எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஷின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து சீன அரசுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அளித்துவரும் அழுத்தங்களில் சமீபத்திய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

ஷின்ஜியாங் மாகாணத்தின் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவர்களின் உழைப்பால் உருவானது என்பதால் தடை செய்யப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களைக் கூறி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீகர் இன முஸ்லிம்களை ஷின்ஜியாங் மாகாணத்தில் சீனா தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சீனா மனித உரிமை மீறல்களை தொடர்ந்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

முறையற்ற, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் முறைகளை உள்ளடக்கிய உழைப்பு மூலம் உருவான பொருட்களை அமெரிக்க விநியோகச் சங்கிலியில் நுழைவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் பருத்தி உற்பத்தியில் சீனாவின் பங்கு சுமார் 20 சதவிகிதம். அதில் பெரும்பாலானவை ஷின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுபவை.

சீன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பெட்ரோகெமிக்கல் மற்றும் பிற மூலப்பொருட்கள் கிடைக்கும் முக்கியமான இடமாக இந்த மாகாணம் இருக்கிறது.

ஷின்ஜியாங் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் சுமார் 45% பேர் வீகர் இனத்தவர்கள்.

வெங்காயம் ஏற்றுமதிக்கு உடனடி தடை

வெங்காயம்

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த அனைத்து ரக வெங்காயத்துக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அன்னிய வர்த்தக தலைமை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

அமித் ஷாவுக்கு ஸ்டாலின், குமாரசுவாமி பதிலடி

ஸ்டாலின் குமாரசுவாமி

ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொளி வாயிலாக வலியுறுத்திய கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் 2020 வரவேற்பை பெறுமா?

ஐபிஎல் 2020: ஐக்கிய அரபில் நடைபெறும் போட்டிகள் - 2009 மற்றும் 2014 போன்ற வரவேற்பை பெறுமா?

போட்டிகள் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெறுமா? குறைந்த அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என பல கேள்விகள் எழுந்தன.

ஆனால் இது குறித்த எந்த அறிவுப்பும் வரவில்லை. இது முந்தைய போட்டிகளை போலவே சுவாரஸ்யமானதாக இருக்குமா என்பதும் தெரியவில்லை.

“ஒரு பாலின திருமணத்துக்கு இதுவரை சட்ட அங்கீகாரம் இல்லை”

ஒரு பாலின திருமணம்

ஒரு பாலின திருமணம் இன்றுவரை சட்டப்பூர்வமாக அங்கீரிக்கப்படவில்லை என்று தனது வாதத்தை இந்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒரு பாலின சேர்க்கை குற்றமற்றதாக தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »