Press "Enter" to skip to content

டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை – அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கை

அமெரிக்காவில் நாளை (ஞாயிற்றுக்கிழமையிலிருந்து) டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகள் தடை செய்யப்படுகின்றன.

இருப்பினும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி நேர ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் இந்த தடை விலக வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஒரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தத் துறை தெரிவித்துள்ளது.

இந்த செயலிகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன எனவும் இந்த செயலிகளில் சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் சீனாவுக்கு வழங்கப்படலாம் டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனாவும் அந்நிறுவனங்களும் மறுக்கின்றன.

வீ சாட் செயலியை பயனர்கள் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பயன்படுத்த இயலாது ஆனால் டிக் டாக் செயலியை நவம்பர் 12ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.

இந்த ஆணையின் மூலம் “அதிருப்தி” அடைந்திருப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் சந்தேகங்களை கருத்தில் கொண்டு இதுவரை இல்லாத அளவு கூடுதல் வெப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வி – சாட் நிறுவனத்தை நிர்வகிக்கும் டென்சன்ட் நிறுவனம் இந்த தடை “துரதிருஷ்டவசமானது” என தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து அமெரிக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்ப் ஆகஸ்டு மாதம் நிர்வாக ஆணை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்பின் வர்த்தகத் துறை இந்த செயலிகளுக்கான தடை ஆணையை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் திட்டமிட்டுள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஓரக்கலுக்கும், டிக் டாக்கை நிர்வகிக்கும் பைட் நடனம் நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு அது அமெரிக்க அதிபரால் ஒப்புக் கொள்ளப்பட்டால் இந்த தடை இருக்காது.

வெள்ளியன்று டிக் டாக் தொடர்பாக விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.

“தீவிர பாதிப்புகளுக்கான ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகும்”

கொரோனா பரிசோதனை

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு அவர் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், “கோவிட்-19 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கடுமையான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, போதுமான மற்றும் தடையற்ற ஆக்ஸிஜன் விநியோகம் இருப்பது அவசியமான நடவடிக்கை என்பதை அறிந்துள்ள அதே சமயம், வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

விவசாயிகள் மசோதா: கடுமையாக எதிர்த்த தமிழக எம்.பி.க்கள்; ஒரே கட்சியாக ஆதரித்த அதிமுக

விவசாயிகள்

விவசாயிகள் வர்த்தகம், வணிகம், விற்பனை தொடர்பான மசோதாக்களை இந்திய நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமை தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், ஒரே கட்சியாக அதை மாநிலத்தில் ஆளும் அதிமுக ஆதரித்தது.

விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மீதான விவாதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் மக்களவையில் வியாழக்கிழமை பேசினார்கள்.

அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் நீங்கலாக அந்த மசோதா மீது பேசிய கோயம்புத்தூர் எம்.பி பி.ஆர். நடராஜன், கரூர் எம்.பி ஜோதிமணி, பொள்ளாச்சி உறுப்பினர் கே. சண்முகசுந்தரம், தென்காசி உறுப்பினர் தனுஷ் எம். குமார் உள்ளிட்டோர் மசோதாவை எதிர்த்துப் பேசினார்கள்.

”பூதம் உங்களை ஒரு நாள் காவு வாங்கும்”

மக்களவையில் விவசாயிகள் பண்ணை வர்த்தகம் தொடர்பான மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பேசியது மிகுதியாக பகிரப்பட்டு பரவியது.

தற்போதுள்ள மாநில சட்டங்களின் கீழ், இந்த சந்தைக் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே, இது மாநில கருவூலத்துக்கும் கணிசமான இழப்பை ஏற்படுத்தப் போகிறது, ஏனெனில் இப்போது அறிவிக்கப்பட்ட பகுதிக்கு, வெளியே உள்ள எந்த பகுதியும் எந்தவொரு மாநில வருவாயையும் உணரமுடியாத ஒரு வர்த்தகப் பகுதியாக கருதப்படும்.

ஒரு விவசாயி அல்லது வர்த்தகர் ஒரு வர்த்தகப் பகுதியில் வர்த்தகம் செய்யும் வேளையில், சாலையின் குறுக்கே மற்றொருவரிடம் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படப்போவது கிராமப்புற அளவில் அபத்தமான விளைவுகளை உருவாக்கப் போகிறது.

இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன்?: ஓவியர் ஹுசைன்

“எதையுமே அறியாதவன் என்பதை அறிந்து கொண்டேன். அதையும் ஏதோ ஒரு வயதில்தான் அறிந்துகொண்டேன்”

பல ஆண்டுகளுக்கு முன்பு, பிபிசியுடன் பேசும்போது, ​​மக்பூல் ஃபிதா ஹுசைன், இந்த கவிதை வரிகளை சொல்லியிருந்தார். உண்மையான அர்த்தத்தில் பார்த்தால், இது அவரது வாழ்வின் தத்துவமும் கூட.

‘கடவுள் தனித்தன்மையில் வாசம் செய்கிறார்’ என்ற பழைய யூத பழமொழி ஒன்று உள்ளது.

இது கடவுளைப் பொருத்தவரை உண்மையோ இல்லையோ, ஹுசைனின் கலையை பொருத்தவரை இது உண்மைதான்.

ஹுசைனின் முழு வாழ்க்கையையும் நீங்கள் பார்த்தால், உடனடியாக நம் கவனத்தை ஈர்ப்பது மிகப் பெரிய உண்மைகள் அல்ல, ஆனால் சிறிய அற்பமான மற்றும் எளிமையான விஷயங்கள்தான். இவற்றை வரலாறு ஒதுக்கி வைத்துள்ளது.

சமூக மாற்றம் படைக்கும் கோயம்புத்தூர் திருநங்கைகள், காணொளியை காண கீழே சொடுக்குங்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »